அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்!.. வலி இப்பவும் இருக்கு!.. அஸ்வின் ஃபீலிங்!…

Published on: December 26, 2025
ashwin
---Advertisement---

கோவையை சேர்ந்தவர் அஸ்வின் குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் இரட்டைவால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற சீரியல்களும் நடித்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். என்ன சொல்லப் போகிறாய் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் ‘நிறைய பேர் கதை சொல்ல வறாங்க… அதுல 40 கதைகளை கேட்டு தூங்கிட்டேன்’ என பேசியிருந்தார்..

இதையடுத்து ’40 கதை கேட்டு தூங்கிய அஸ்வின் ‘ என ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அஸ்வினை ட்ரோல் செய்தார்கள். இது அஸ்வினுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குறைந்தது. தற்போது நொடிக்கு நொடி, ஹாட் ஸ்பாட் டூ மச் என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அஸ்வின் ‘அன்னைக்கு நான் மேடையில பேசுனதுக்கு இந்த மீடியால என்னவெல்லாம் பேசினாங்க.. எப்படியெல்லாம் ட்ரோல் செஞ்சாங்க.. இந்த மீடியாவில் என்னை வைத்து எப்படி எல்லாம் போன் பண்ணாங்க அப்படி நான் என்ன தப்பு பண்ணேன். நான் பேசினது யாரையாவது காயப்படுத்தி இருந்தா நானே மன்னிப்பு கேட்டிருப்பேன். என்கிட்ட இழக்க ஒன்னுமே இல்ல.

இப்ப எல்லா பயமும் போயிடுச்சு.. நான் தப்பு பண்ணாதான் பயந்து பேசணும்.. ஆனா இனிமே ஒழுங்கா பேசணும்னு கத்துக்கிட்டேன். ஆனா கடைசிவரை அந்த காயம் போகவே போகாது’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.