ஓவர் பந்தாவில் வாய்ப்பை இழந்த ஸ்லீப்பிங் ஸ்டார்.. வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்..

by சிவா |   ( Updated:2021-12-20 22:17:59  )
ashwin
X

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். எனப்பேசியிருந்தார்.

ashwin

இது திரையுலகினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம் நெட்டிசன்கள் அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என பட்டம் கொடுத்து கலாய்க்க துவங்கிவிட்டனர். பல மீம்ஸ்களும் வெளியானது. எனவே, தவறை உணர்ந்த அஸ்வின் நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டார்கள் என சப்பை கட்டு கட்டினார். ஆனாலும், அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்கிற பட்டம் மாறவில்லை.

ashwin

இவரை வைத்து ஒரு புதிய படத்தை துவக்க ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஒரு இயக்குனர் கூறிய கதை பிடித்துப்போக, அஸ்வினை தொடர்பு கொண்டு இயக்குனரை அனுப்புகிறோம் கதை கேளுங்கள் எனக்கூறியுள்ளது. பிரபல நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட எண் கொண்ட அறையை கூறி ‘அதில்தான் நான் கதை கேட்பேன்’ எனக்கூறியுள்ளார் அஸ்வின். சம்பந்தப்பட்ட நிறுவனமும் அதை ஏற்பாடு செய்ய, இயக்குனர் அங்கு சென்று காத்திருந்தார். காலையிலிருந்து மாலை வரை அவர் காத்திருந்தும் அஸ்வின் அங்கு வரவில்லை.

ashwin

எனவே, அஸ்வினை அவர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னைக்கு மூட் இல்ல பாஸ்.. நாளைக்கு பாப்போம்’ என கூலாக பதில் கூறியுள்ளார் அஸ்வின். இதனால் கடுப்பான பிரபல தயாரிப்பு நிறுவனம் அந்த வாய்ப்பை கவினுக்கு கொடுத்துவிட்டது.

Kavin

Kavin

இப்படியே ஓவர் பந்தா செய்தால் வாய்ப்புகளை இழப்பார் அஸ்வின் என திரையுலகில் பேச துவங்கிவிட்டனர்.

Next Story