Actor Asokan: நம்பியாருக்கு அடுத்த படியாக தன் உடல் அசைவுகளாலும் கண்ணசைவுகளாலும் அனைவரையும் மிரட்டிய வில்லன் நடிகர் என்றால் அது அசோகன்தான். ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்த அசோகன் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர்.
அதனாலேயே தன்னுடைய அரசியலிலும் அசோகனை சேர்க்க எம்ஜிஆர் முயற்சி செய்தார். ஆனால் அரசியலில் ஆர்வம் இல்லாத அசோகன் எம்ஜிஆரின் அரசியல் பயணத்தில் தலையிட வில்லை. அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அசோகனுக்கு நெருக்கமாக இருந்த குடும்பங்கள் என்றால் மொத்தம் 4 குடும்பங்கள்தானாம்.
இதையும் படிங்க: டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர் என்ன செஞ்சாரு தெரியுமா?… அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!…
ஏசி.திருலோகச்சந்தர், ஏவிஎம் சரவணன், எம்ஜிஆர் மற்றும் ஜெய்சங்கர் இவர்கள் குடும்பத்துடன்தான் ஜெய்சங்கருக்கு மிகவும் நெருக்கமாம். அசோகன் அந்த நேரத்தில் ஒரு பிராமண பெண்ணை காதலித்துக் கொண்டிருக்க அவரை திருமணம் செய்ய நினைத்திருக்கிறார்.
ஆனால் இவர்கள் திருமணத்திற்கு அந்த பெண் வீட்டிலிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதனால் யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணை வீட்டிலிருந்து அழைத்து வந்த அசோகன் ஒரு சர்ச்சில் திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கமல் சொன்ன ஒரு வார்த்தை! அப்பவே ஜெயிச்சுட்டோம்னு தெம்பு வந்தது – அந்தப் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?
இருந்தாலும் அந்த பெண் வீட்டில் இருந்து வந்து விடுவார்கள் என நினைத்து சர்ச்சின் கதவுகளை முடிக் கொண்டுதான் இவர்கள் திருமணம் நடந்ததாம். இவர்கள் திருமணத்திற்கு ஆசீர்வாதம் செய்ய வந்தவர்கள் ஏசி. திருலோகச்சந்தர், ஏவிஎம் சரவணன் மற்றும் எம்ஜிஆர்.
ஆனால் ஜெய்சங்கர் அப்போது வெளிப்புற படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அசோகன் திருமணத்திற்க்கு வரமுடியவில்லையாம். படப்பிடிப்பை முடித்த கையோடு ஜெய்சங்கர் அசோகனை தன் வீட்டிற்கு அழைத்து விருந்துகளை கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தாராம். இந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…
