Connect with us

இவருதான்யா மனுசன் – இக்கட்டான சமயத்தில் பெஞ்சமினுக்கு கை கொடுத்த மயில்சாமி

latest news

இவருதான்யா மனுசன் – இக்கட்டான சமயத்தில் பெஞ்சமினுக்கு கை கொடுத்த மயில்சாமி

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த மிமிக்ரி கலைஞர் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.

1980-களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான இவர், ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்தார். பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு நடித்த கன்னிராசி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். இருப்பினும், 2000-களுக்குப் பிறகு விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது . தூள், கில்லி, கணேஷ், உத்தமபுத்திரன், வீரம், தேவைதயை கண்டேன் போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் எல்லாம் மயில்சாமி காமெடி நன்றாகவே ரசிக்கப்பட்டன. குறிப்பாக விவேக்குடன் இவர் நடித்த நகைச்சுவைகாட்சிகள் எல்லாம் இன்றும் பிரபலம்.கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவராத்திரி அன்று அதிகாலையில் மயில்சாமி காலமானார்.

இந்த நிலையில் நடிகர் பெஞ்சமின் மயில்சாமி குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு மாரடைப்பாகி பெங்களூரு நாராயணா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தார்கள்.கையில் சுத்தமா காசு இல்ல. யாராவது உதவி செய்யுங்கனு ஒரு வீடியோ போட்டேன். அதை பார்த்த மயில்சாமி சார் உடனடியாக போன் செய்து நான் இருக்கேனு சொன்னார். உடனடியாக ரூ 4 லட்சத்து 25000 ரூபாயினை மொத்தமாக அவரே மருத்துவமமனைக்கு கொடுத்தார் என்உ நெகிழ்ச்சியுடன் கூறினார்.

To Top