சிவாஜிக்கு பிறகு மோகனாலதான் அது செய்ய முடியும்! பாக்யராஜ் சொன்ன சூப்பரான தகவல்
Actor Mohan:80களில் ரஜினி, கமல் ஒரு பக்கம் கோலோச்சி இருந்தாலும் மென்மையான முகத்துடன் அன்றைய காலகட்டத்தில் அனைத்து பெண்களின் கனவு கண்ணனாக ஒட்டுமொத்த பெண் ரசிகைகளின் மனதை திருடிய கள்வனாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகர் மோகன். மற்ற நடிகர்களைப் போலவே அன்றைய காலகட்டத்தில் இவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன் பல நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்தவர் தான்.
இவரின் திறமையை அறிந்த பாலு மகேந்திரா கோகிலா என்ற படத்தின் மூலம் மோகனை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். முதல் படமே மோகனுக்கு மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்று தந்தது. மோகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது மைக். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மைக்கை பிடித்து பாட்டு பாடி நடித்ததுதான் ஏராளம். அதனாலயே இவரை மைக் மோகன் என இன்று வரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ‘வாடிவாசல்’ படத்தில் தன்னுடைய கேரக்டரை உறுதிசெய்த அமீர்! இங்கேயும் சண்டைதானா?
அதேபோல் இவரின் எல்லா படங்களிலும் இவருடைய அந்த மென்மையான குரலுக்கு சொந்தக்காரராக இருந்தவர் நடிகர் விஜயின் தாய் மாமனான சுரேந்தர் தான். மோகன் நடித்த படங்களிலேயே பாசப்பறவைகள் என்ற படத்தில் மட்டும் தான் மோகன் சொந்தக் குரலில் பேசி நடித்தார். மற்ற அனைத்து படங்களிலும் சுரேந்தர் தான் இவருக்கு குரல் கொடுத்தவர்.
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நேற்று மோகன் அவருடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அதோடு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று அவருடைய பிறந்தநாள் விழா என்பதால் அதில் கலந்து கொள்ள பாக்கியராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாருடன் காதலில் இருந்த ஜெமினி கணேசனின் மகள்… போராடி மீட்ட மனைவி…
அப்போது பேசிய பாக்கியராஜ் மோகன் என்றாலே கண்டிப்பாக பாடலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சிவாஜிக்கு பிறகு பாட்டிலும் சிறந்து நடிக்கக்கூடிய நடிகராக மோகன் தான் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர் எனக் கூறியிருக்கிறார். பாடல் காட்சிகளில் சிவாஜி நடிக்கும் போது ஸ்வரங்கள் ஏற்றம் இறக்கம் வரும்போது அவருடைய நாடி நரம்புகள் எல்லாம் வெளியே தெரியும் அளவுக்கு அவரே பாடுவது போல நடிப்பார். அதே ஒரு நடிப்புத் திறமையை மோகனிடமும் பார்க்கலாம். உண்மையிலேயே மோகன்தான் பாடுகிறாரா என்ற அளவுக்கு பாடல் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் மோகன் என பாக்கியராஜ் கூறினார் .