ரோட்டில் ஐஸ்கிரீம் விற்கும் குட்டி விஜய்!.. அட இவருக்கா இந்த நிலைமை?!...
பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறுவயது விஜயாக நடித்தவர் பரத் ஜெயந்த். மேலும், வானத்தபோல திரைப்படத்திலும் விஜயகாந்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் போது அவரின் சைக்கிள் பஞ்சராகி விட விஜயகாந்த் அவரை தன் தலை மேல் உட்கார வைத்து தூக்கிச்சென்று பள்ளிக்கு கூட்டு செல்வார்.
மேலும் பல திரைப்படங்களில் சிறுவனாக பரத் ஜெயந்த் நடித்துள்ளார். அதோடு, சன் டிவியில் ஒளிபரப்பான முதல் மெகா தொடரான வாரிசு சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அது மட்டுமில்லாமல் பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால், திடீரென அவர் சினிமாவிலிருந்து காணாமல் போனார். தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கும் பரத் சென்னை பெசண்ட் நகரில் ஐஸ்கிரீம் விற்று வருகிறார். ஒரு வேனை கடை போல் செட் செய்து வியாபாரம் செய்து வருகிறார். விடுவார்களா நம் ஆட்கள்? இவரையும் தேடிச்சென்று பேட்டியெடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் பேசியுள்ள பரத் ‘பல படங்களில் நடித்தேன். சீரியல்களில் நடித்தேன். அப்போதெல்லாம் வெளியே சென்றால் மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள். பலர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். சிறு வயதிலேயே எல்லா புகழையும் பார்த்துவிட்டேன். சிறு வயதில் ஐஸ்கிரீம் கடை வைத்து அதில் உள்ள எல்லா ஐஸ்கிரீம்களையும் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவேன். இப்போது அதுவே என் தொழிலாகி விட்டது. இப்போது கூட என் கடைக்கு வருபவர்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுவார்கள்.
சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளது. ஆனால், என் தொழில் நான் இல்லாவிட்டாலும் நடக்கும் என்கிற நிலை வரவேண்டும். அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். கண்டிப்பாக எதிர்காலத்தில் சினிமாவில் நடிப்பேன்’ என பரத் ஜெயந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பாரதிராஜா… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?