அவ என்ன அவாய்ட் பண்றா!.. அஞ்சலி பற்றி ஃபீலிங்காக பேசிய பிளாக் பாண்டி...

by சிவா |
black pandi
X

இயக்குனர் ராம் இயக்கிய முதல் திரைப்படமான‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே அழகான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

pandi

இந்நிலையில், அங்காடித்தெரு படத்தில் அவருடன் நடித்த நடிகர் பிளாக் பாண்டி சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு படம் நடிப்பதற்கு முன்பே நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் நடன பயிற்சி எடுத்தோம். ஆனால், அவரிடம் பேசி செல்போனை அழைத்தால் அவரின் மேனேஜர்தான் பேசுகிறார்.

சமீபத்தில் மலேசியா சென்ற போதுதான் அவரை பார்த்து ‘ஏண்டி உனக்கு போன் பன்னா மேனேஜரை விட்டுத்தான் பேச சொல்வியா?’ எனக்கேட்டேன். உடனே, அவரின் செல்போன் எண்ணை கொடுத்து அதில் அழைக்குமாறு கூறினார். அந்த எண்ணில் பல முறை அழைத்தும் அந்த போனை அவர் எடுக்கவில்லை.

என்னை அவர் அவாய்ட் செய்வதை புரிந்து கொண்டேன். வளர்ந்து ஒரு இடத்திற்கு சென்றதும் இந்த மாதிரி செய்ய வேணும் என எப்படி தோணுகிறதோ தெரியவில்லை’ என ஃபீலிங்காக பேசியுள்ளார்.

Next Story