சான்ஸே இல்ல... அந்த விஷயத்துல விக்ரம் மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாதாம்..!

by sankaran v |
vikram
X

vikram

பா.ரஞ்சித் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் தங்கலான். இந்தப் படத்தைப் போல அவர் இதுவரை கஷ்டப்பட்டு நடித்தது இல்லை என்றே சொல்லி இருக்கிறார். அதற்கான பலனும் கிடைத்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூலே தமிழகத்தில் 11 கோடியைத் தொட்டுள்ளது.

படத்தில் அவர் கமலைப் போல கோவணம் கட்டி நடித்துள்ளது ரொம்பவே ஆச்சரியமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம் தனது மாறுபட்ட நடிப்பால் பல தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரது தனிப்பட்ட குணங்களும் ஆச்சரியப்படும் வகையில் தான் உள்ளது. இது பற்றிய தகவல் ஒன்றை இப்போது பார்ப்போம்.

நடிகர் விக்ரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் நடிகர் பாபி சிம்ஹா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

விக்ரமைப் பொருத்தவரை அவரை ரொம்ப பிடிக்கும். மகான், சாமி 2 படத்தில அவரு கூட நடிச்சிருக்கேன். மகான் படத்தில் எனக்கு அப்படி சப்போர்ட் பண்ணினாரு. நல்லா நடிச்சா அவரு அப்படி பாராட்டுவாரு. சின்ன நடிகர் அப்படி நடிச்சாக்கூட பாராட்டிருவாரு. அந்த மனசு எல்லாம் எல்லாருக்கும் வராது.

bobby simha

bobby simha

நல்லா சுதந்திரம் கொடுப்பார். உன்னால முடியும். பண்ணுங்கன்னு சொல்வாரு. அதே நேரம் துருவ் பயங்கர வெறி உள்ள நடிகர். அடுத்த படத்துல நீங்க பார்ப்பீங்க. ஒரு ஆக்டருக்கான எல்லா விஷயத்திலும் தேர்ந்து ரெடியா இருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நீண்ட காலமாக படங்களில் நடித்து வெளியே தெரியாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அத்திபூத்தாற்போல அவருக்கு சேது படம் பாலாவின் இயக்கத்தில் வெளியானது. அந்தப் படத்துக்காக தனது உடலை வருத்தி விக்ரம் நடித்து இருந்தார். படத்திற்கு அது பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்து அவரைத் தூக்கி நிறுத்தியது.

அந்தப் படத்தில் ச்சீயானாக கேலி செய்யப்பட்ட விக்ரமுக்கு பின்னாளில் அதுவே அடையாளமாகியது. அன்று முதல் வித்தியாசமான கெட்டப்புகளில் கலக்கி நடித்து வருகிறார் விக்ரம். அவரது பெருமைக்குரிய பட வரிசைகளில் தங்கலானும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story