தனுஷ் படத்துல நடிச்சதால என் மனைவி கதறி அழுதாங்க....பிரபல நடிகர் வேதனை.....

by Manikandan |
தனுஷ் படத்துல நடிச்சதால என் மனைவி கதறி அழுதாங்க....பிரபல நடிகர் வேதனை.....
X

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். கார்த்திக் நரேனும் தனுஷ் முதல்முறையாக இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட மாறன் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. அந்த படம் OTT தளங்களில் வெளியான பின்பு, இனிவரும் திரைப்படங்களை பார்த்த பிறகு தான் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு ஒடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன. இதுதான் இந்த படத்தின் சாதனை என்று கூறுகின்றனர் இணையவாசிகள்.

இந்த திரைப்படத்தில் சமுத்திரகனியின் உதவியாளராக பிரபல நடிகர் போஸ் வெங்கட் நடித்திருப்பார். இந்த திரைப்படம் பற்றி அண்மையில் அவர் தனது அனுபவத்தை கூறுகையில், இந்த திரைப்படத்தை பார்த்த எனது மனைவி என்னை கட்டி பிடித்து அழுது விட்டார் என்று கூறினார்.

இதையும் படியுங்களேன் - பீஸ்ட் பாடலை பங்கமாய் கலாய்த்த யுவன்.! வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.!

காரணம் என்னவென்று கேட்கையில், ' இதே போல 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் நீங்கள் ஒரு அரசியல்வாதியின் உதவியாளராக நடித்து இருந்தீர்கள். தற்போதும் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறீர்கள் என்றால் ஒன்று நீங்கள் வளரவில்லை. இல்லை என்றால், உங்கள் கதை தேர்வு தவறாக இருக்கிறது.' என்று கூறினாராம். மேலும், இந்த படத்தில் நானே ஏன் நடித்தேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். என்று போஸ் வெங்கட் அந்த பேட்டியில் மிகவும் வெளிப்படையாக பேசினார்.

இந்த திரைப்படம் எடுக்கும் போது இயக்குனருக்கும் நடிகர் தனுசுக்கும் பிரச்சனைகள் எழுந்ததாகவும், சில காட்சிகளை தனுஷ் இயக்கினார் என்ற செய்திகளும் இணையத்தில் உலா வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Next Story