அமரன் ஹிட்டுன்னு யார் சொன்னா?.. எல்லாம் பொய்!.. பொங்கும் கங்குவா பட நடிகர்!..

by சிவா |   ( Updated:2024-11-22 02:10:46  )
amaran
X

கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான படம் பாக்ஸ் ஆபிசிலும் ரூபாய் 3௦௦ கோடியை தாண்டியுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களே மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வையுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இப்படம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ரஹ்மான் ‘சொத்து’ மதிப்பு எவ்ளோன்னு பாருங்க! விவாகரத்து ஆனாலும் ‘கெத்து’ குறையல…

இந்தநிலையில் இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் அமரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாமே திட்டமிட்டு உருவாக்கியது என்று தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், 'படத்திற்கு நெறைய செலவு ஆனதால போட்ட காச எடுக்கணும்.

அப்படின்னு ரசிகர்கள் அழுகுற மாதிரி வீடியோக்கள உருவாக்கி வெளியிடுறாங்க. வசூல் குறித்த விஷயங்கள் உண்மை இல்லை. இன்னும் 5,6 வாரம் ஓடுனா தான் போட்ட காசு திரும்ப கெடைக்கும். அதுக்கு திரைமறைவுல வேலை செய்றாங்க.

bose venkat

#image_title

ஒரு படத்தை பாக்கணுமா இல்லையான்னு நீங்க முடிவு பண்ணுங்க. யாரோ ஒரு ப்ளூ சட்டை மாறன் சொல்றத கேட்டு படத்துக்கு போகாதீங்க. நீங்க என்ன சாப்பிடணும்னு நீங்கதானே முடிவு செய்றீங்க. இதையே படத்துக்கும் பாலோ பண்ணுங்க,' என ஓபனாக பேசியிருக்கிறார்.

இவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போஸ் வெங்கட் சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னது பிகிலை கைதி கதற விட்டுச்சா?!.. கங்குவாவ கதறவிட்டது யாருப்பா!… ப்ளூ சட்டை மாறன் பளார்!…

Next Story