எனக்கு நடிக்க தடை.! விஜயகாந்த், சிம்பு தான் என் பக்கம் இருந்தாங்க.. கிரிக்கெட் வீரரின் சீக்ரெட்ஸ்...

by Manikandan |
எனக்கு நடிக்க தடை.! விஜயகாந்த், சிம்பு தான் என் பக்கம் இருந்தாங்க.. கிரிக்கெட் வீரரின் சீக்ரெட்ஸ்...
X

சிறிக்கெட் வரணையாளராக, சினிமாவில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக, சினிமாவை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளும் விமர்சகராக பாஸ்கியை பலருக்கும் தெரிந்து இருக்கும்.

அண்மையில் இவர் தனது திரை அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசுகையில் தான் இவர் ஒரு கிரிக்கெட் வீரர். தேசிய அளவிலான போட்டிகளில் இவரும் சில மேட்சுகளுக்கு செலெக்ட் ஆகியுள்ளார். கிருஷ்ணமாச்சரி ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியில் இவரும் விளையாடியுள்ளார் என கூறியபோது தான் இவர் இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதே தெரிய வந்தது.

மேலும், இவர் சின்னத்திரை உள்ளே எப்படி வந்தார் என்பதையும் அதில் குறிப்பிட்டார். அவருக்கு கலாய்ப்பது, காமெடியாக அனைவருக்கும் புரியும் படி வர்ணை செய்வது மிக சர்வ சாதாரமாக வருமாம். அதனை கொண்டு தான் தமிழ் படங்களை கலாய்த்து முன்னணி சேனலில் விமர்சனம் செய்து வந்தாராம்.

ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார் பாஸ்கி. இதனை பார்த்த நடிகர் சங்கம் அப்போது கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை இவரை நடிக்க கூடாது என ரெட் கார்ட் தடை போட்டனாராம்.

இதையும் படியுங்களேன் - தளபதி 66 ஹீரோயினுக்கு ஏற்பட்ட நிலைமை.! வருத்தத்த்தில் ரசிகர்கள்...

அப்போது இவருக்கு துணையாக இருந்தது அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த். அவர் என்ன கூறினார் என்றால் , ' ஒரு நபரை தாக்கி பேசினால் தான் தவறு. மற்றபடி சினிமாவை, சினிமாவில் வரும் கதாபாத்திரங்களை கேலி செய்தால் அது தவறில்லை.' என கூறி சப்போர்ட் செய்தாராம் விஜயகாந்த்.

அந்த சமயம் திரையுலகில் பலரும் இவருக்கு எதிராக தான் இருந்தனராம். ஆனால், இவருக்கு சப்போர்ட்டாக இருந்தது சிம்பு , கெளதம் மேனன் போன்ற ஒரு சிலர் தான். என பாஸ்கி அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

Next Story