கமலையும் ரஜினியையும் கிண்டல் பண்ணுனதுக்கா இந்த தண்டனை? ஓட ஓட விரட்டப்பட்ட பிரபலம்

by Rohini |
rajini
X

rajini

தமிழ் சினிமாவில் கமலும் ரஜினியும் எப்பேற்பட்ட ஒரு ஆளுமையான நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்என்று அனைவருக்குமே தெரிந்த விஷயம். அவர்கள் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. எந்த ஒரு காமெடி ஷோ போனாலும் ரஜினி , கமலை போல் மிமிக்ரி செய்யாமல் அந்த ஷோ முழுமையடையாது.

அந்த அளவுக்கு இருவரும் ஒரு சினிமாவின் இரு பெரும் துருவங்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில்
நடிகர் பாஸ்கி கமல் நடித்த நாயகன் கதாபாத்திரத்தையும் ரஜினி நடித்த பாட்ஷா கதாபாத்திரத்தையும் ஏற்று நகைச்சுவை செய்ததால் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கிறார்.

rajini1

rajini1

நடிகர் பாஸ்கி மேடை தொகுப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பல படங்களில் நடித்தும் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஹரி கிரி அசெம்பிளி மற்றும் சிரி கிரி ஸ்டேஷன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். சன் டிவியில் சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சியையும் காஷாயம் என்ற தமிழ் சினிமா விமர்சன நிகழ்ச்சியினையும் வழங்கினார். விஜய் தொலைக்காட்சியில் இது எப்படி இருக்கு நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராகத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சியில் நேர்காணல் என்ற முறையில் பாட்ஷாவாகவும் அவரே கேள்விகளை கேட்பவராகவும் அந்த கதாபாத்திரத்தை கிண்டல் செய்து ஒரு மோனோ ஆக்ட் மாதிரி பண்ணியிருக்கிறார். அதே போல் வேலு நாயக்கரை நேர்காணல் எடுப்பது போலவும் அவரே கேள்வி கேட்டும் வேலு நாயக்கராக அவரே பதிலளித்தும் கிண்டல் செய்து நகைச்சுவை வடிவத்தில் கொண்டு போயிருக்கிறார்.

rajini2

rajini2

இதை அறிந்த திரைப்பிரபலங்கள் அந்த நேரத்தில் பாஸ்கிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்களாம். எப்படி அந்த மாதிரி கிண்டல் செய்யலாம் என கேட்டார்களாம். அதற்கு பாஸ்கி ‘ நான் ஒன்றும் ரஜினியையோ கமலையோ நேரிடையாக கிண்டல் பண்ணவில்லை என்றும் அவர்களின் கதாபாத்திரத்தை வைத்து தான் கிண்டல் செய்தேன்’ என்றும் கூறினாராம்.

அது மட்டுமில்லாமல் டாக்டர், வக்கில், போலீஸ் என நீங்கள் மட்டும் அந்த ரோலை கிண்டல் செய்வதில்லையா? ஏன் முறைப்படி கற்றுக் கொண்டு வந்தா நடிக்கிறீர்கள்? என நடிகர்களை பார்த்தும் பாஸ்கி கேள்வி எழுப்பினாராம். இது பெரிய விவாதமாக போக ஒரு கட்டத்தில் சிம்புவும் விஜயகாந்தும் தான் இவருக்கு ஆதரவாக பேசினார்களாம். அதாவது அவர் அவர் தொழிலைத்தான் பார்க்கிறார், அதனால் அவரை விடுங்கள் என்று சொல்லி பிரச்சினையை முடித்து வைத்தார்களாம். அதோடு அந்த சேனலுக்கும் நிகழ்ச்சிக்கும் முழுக்கு போட்டு வந்து விட்டாராம் பாஸ்கி.

Next Story