சந்திரபாபு எழுதிய தற்கொலைக் கடிதம்... என்ன சார் இதுக்கா இப்படி?

by Akhilan |   ( Updated:2022-09-27 07:14:15  )
சந்திரபாபு எழுதிய தற்கொலைக் கடிதம்... என்ன சார் இதுக்கா இப்படி?
X

கருப்பு வெள்ளை காலத்தின் முக்கியமான காமெடியன் சந்திரபாபு. அவருடைய குரலில் ஒலித்த பல பாடல்கள் இன்றும் எவர்கிரீனாக நிலைத்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சந்திரபாபுவுக்கு முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது தெரியுமா?

எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த சந்திரபாபுவின் உண்மையான பெயர் ஜோசப் பிச்சை. சென்னை வந்து பல ஸ்டூடியோக்களுக்கும் நடையாய் நடந்திருக்கிறார். ஆனால், வாய்ப்புதான் கிடைக்கவே இல்லை. ஜெமினி ஸ்டூடியோவில் ஜெமினி கணேசன் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது.

அப்போது ஸ்டூடியோவுக்குப் போன சந்திரபாபு, திடீரென விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கினார். இதனால், ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பானது. அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் பிடித்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது ஜெமினி கணேசன். மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்த சந்திரபாபு மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதியப்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆராவது சிவாஜியாவது..! அவங்கள முந்த பிறந்த நடிகன் நான்..! சொன்னவரின் நிலைமை இப்ப என்னாச்சுனு தெரியுமா…?

நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த சந்திரபாபுவிடம் ஏன் தற்கொலைக்கு முயன்றாய் என்று நீதிபதி கேள்வி கேட்டார். உடனே பையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து உரசி தனது உள்ளங்கையில் வைத்தார். இதனால், நீதிபதியின் கோபத்துக்கு ஆளான சந்திரபாபு, இந்தக் குச்சியை உரசினதை நீங்க எல்லாரும் பார்த்தீங்க... ஆனால், அதோட சூட்டை என்னால் மட்டும்தான் உணர முடிஞ்சது. அதுபோல, என்னோட ஃபீலிங்ஸை நான் மட்டும்தான் உணர முடியும் என்று சொன்னார். முதல் தடவை என்பதால், உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன்னு நீதிபதி சொல்லி அவரை விடுவித்தார்.

தற்கொலை செய்யும் முன்னர் சந்திரபாபு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி எஸ்.எஸ்.வாசனிடம் ஜெமினி கணேசன் சேர்ப்பித்தார். அந்தக் கடிதத்தில், 'திரு.வாசன் அவர்களுக்கு, நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்க முடியாதுன்னு சொல்லீட்டீங்க. என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிஞ்சவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது தப்பு. இத்தனை பெரிய ஸ்டுடியோவில் எனக்கு சான்ஸ் இல்லை. நான் ஒழிஞ்சு போறேன், செத்துப்போறேன்’ என்று எழுதி வைத்திருந்தார். அதன்பிறகே ஜெமினி தயாரிப்பில் பி.எஸ்.ராமையா இயக்கிய தன அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். Rest is History!

Next Story