சிவாஜி படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரபாபு!.. இது எப்ப நடந்துச்சுன்னு தெரியுமா?…
தமிழ் சினிமாவில் சிவாஜி எப்படி சிறந்த நடிகராக விளங்கினாரோ அதேபோல் சந்திரபாபு சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தார். சிவாஜி நாடகங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார் எனில், சந்திரபாபு தன் மீதிருந்த அதீத நம்பிக்கையில் சினிமாவுக்கு வந்தவர். சிவாஜி ஹீரோவாக நடித்த பல படங்களில் காமெடி நடிகராக சந்திரபாபு நடித்துள்ளார்.
சந்திரபாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால், சிவாஜி நடித்த ஒரு படத்தில் சந்திரபாபு ஹீரோவாக நடித்தார் என்றால் அது நம்ப முடிகிறது. சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும்.. ஒரு படத்தில் இருந்து ஒரு ஹீரோ விலக அவருக்கு பதில் இன்னொரு நடிகர் நடிப்பார்.. அல்லது ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவருக்கு அந்த கதை பிடிக்கமால் வேறு ஒரு நடிகர் நடிப்பார். இது தமிழ் சினிமால் அதிகம் நடக்கும்.
நடிகர் சந்திரபாபு நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு கதாசிரியரும் கூட. அவர் ஒரு கதையை உருவாக்கினார். அந்த கதையை அப்போது பிரபல இயக்குனராக இருந்த பீம்சிங் இயக்க புதிய படம் உருவானது. ‘அப்துல்லா’ என தலைப்பு வைத்து அந்த படத்தில் சந்திரபாபு ஹீரோவாக நடித்தார்.
சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எடுத்த காட்சிகளை பார்த்தபோது பீம்சிங்கிற்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, அந்த திரைப்படத்தை டிராப் செய்துவிட்டார். அதன்பின் அதே கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து சிவாஜி, ஜெமினி கணேசன், தேவிகா, சாவித்ரி ஆகியோர் நடித்து, ஏவிஎம் தயாரிப்பில் உருவானது. அந்த படம்தான் பாவ மன்னிப்பு. 1961ம் ஆண்டு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.