Connect with us
chandrabab

Cinema History

எம்.ஜி.ஆரின் அண்ணனை Chair-ஐ தூக்கி அடித்த சந்திரபாபு!.. அப்புறம்தான் வாழ்க்கையே போச்சு!..

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபு முக்கியமானவர். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர். சினிமாவில் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். தன் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.

அதனாலேயே அவரையே அறியாமல் அவருக்கு தலைக்கணமும் இருந்தது. நாமே சிறந்த நடிகர் என எப்போதும் எண்ணி கொண்டிருந்தவர். இதனாலேயே சக நடிகர்களை எடுத்தெறிந்து பேசி விடுவார். அதனால், சந்திரபாபுவின் பேச்சும், நடவடிக்கையும் திரையுலகில் பலருக்கும் பிடிக்காது. ஆனால், நடிப்பால், நடனத்தால், பாட்டால் அவர் ரசிகர்களை கவர்ந்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வந்தது.

சந்திரபாபு
சந்திரபாபு

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட பல நடிகர்களின் படங்களிலும் சந்திரபாபு நடித்துள்ளார். எப்போதும் கெத்தாக வலம் வருவார். நடிகராக இருந்தவரை இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எப்போது படங்களை தயாரிக்க துவங்கினாரோ அப்போதுதான் இவருக்கு இறங்கு முகம் துவங்கியது. அதுவும் சின்ன நடிகர்களை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் படத்தை தயாரிக்க விரும்பினார். மாடி வீட்டு ஏழை என்கிற படத்தை தயாரித்தார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த ரூ.5 லட்சம் வரை செலவு செய்துவிட்டார். இப்போது அது சில கோடிகளுக்கு சமம். ஆனால், படப்பிடிப்பு எம்.ஜி.ஆர் சரியாக செல்லவில்லை. அவர் அப்படி செய்ததற்கு காரணமும் இருந்தது.

எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை அவரின் அண்னன் சக்கரபாணிதான் பார்த்து வந்தார். அவரிடம் சந்திரபாபு பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் எழுந்து அங்கிருந்த சேரை எடுத்து சக்கரபாணியின் தலையில் சந்திரபாபு அடித்துவிட்டார். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. வினியோகஸ்தர்கள் சந்திரபாபு நடித்த படங்களை வாங்க மறுத்தனர். சில வருடங்கள் சந்திரபாபு எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. கடன்களில் சிக்கி தவித்தார். வறுமையில் வாடினார்.

அதன்பின் அவருக்கு எம்.ஜி.ஆரே உதவி செய்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அவரை மேலே தூக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top