கீரவாணிக்கு தமிழ் நடிகரிடமிருந்து பறந்த வாழ்த்து செய்தி!.. இப்படி ரியாக்ட் பண்ணுவாருனு நினைக்கல..
லாஸ் ஏஞ்சல்ஸில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது உலகளாவிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து ஒரு சில பிரபலங்கள் கலந்து கொண்டனர்.விழாவின் துவக்கமே பாலிவுட்டின் குயின் தீபிகா படுகோனேவிடமிருந்து துவங்கியது.
அவர் விருது வழங்கும் விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட எதிர்பார்த்த மாதிரி ‘ நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஆஸ்கரையும் அறிவித்தது.
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கீரவாணி என்ற இசையமைப்பாளர்.இவர் ஏற்கெனவே தமிழில் வானமே எல்லை, பிரதாப், கொண்டாட்டம் போன்ற படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகராக இருக்கும் சார்லி இசையமைப்பாளர் கீரவாணியை பற்றி ஒரு தகவலை கூறினார். ‘கொன்றால் பாவம்’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்தில் சார்லியும் நடித்திருக்கிறார்.
வெற்றிவிழா நடைபெறும் தேதியில் சார்லி வேறொரு படப்பிடிப்பில் இருக்க கண்டிப்பாக நான் போய் தீருவேன் என்று அந்த படத்தின் இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் ‘ஏன் இவ்ளோ தீவிரம் காட்டுகிறீர்கள்?’ என்று கேட்க அதற்கு ‘ நன்றியுணர்வை காட்ட போகவேண்டும் ’ என சொல்லிவிட்டு,
அதற்கு உதாரணமாக கீரவாணியின் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். கீரவாணிக்கும் சார்லிக்கும் எந்த பழக்கமும் கிடையாது, நெருக்கமும் கிடையாது. ஆனால் இந்தியாவில் இருந்து ஒருவர் ஆஸ்கர் விருதை வென்று சினிமாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்ற காரணத்தால் சார்லி கீரவாணிக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை குறுஞ்செய்தியாக அனுப்பினாராம்.
இதையும் படிங்க : பாடகர்.. 2500 கச்சேரிகளில் பாடியவர்!.. ‘நான் கடவுள்’ நடிகருக்கு இப்பāடி ஒரு கதை இருக்கா!…
அடுத்த இரண்டு மணி நேரத்தில் கீரவாணி சார்லிக்கு நன்றி என பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாராம். அதை பார்த்த சார்லிக்கு ஆச்சரியப்பட்டு போனாராம். ‘இந்தியா சார்பாக ஆஸ்கர் வாங்கிய ஒரு கலைஞனுக்கு பிரதமரிலிருந்து பல பிரபலங்கள் வாழ்த்துக்களை சொல்லுவார்கள், அந்த பிஸியான நேரத்திலும் எனக்கு நன்றி சொல்லனும் என்று அவசியமில்லை, ஆனால் அந்த நன்றிக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறார் பாருங்கள்’ என்று தான் வந்த காரணத்தை கூறினார் சார்லி.