காசுக்காக இந்த மாதிரி ச்சீப்பா நடிக்காதீங்க.. – நடிகர் சேத்தனை கமெண்டில் குடையும் நெட்டிசன்கள்..!
சின்ன திரையில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி, மர்ம தேசம் போன்ற நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவர் நடிகர் சேத்தன். தமிழில் சிறந்த நடிகர்களாக இருந்தாலும் கூட சிலர் சின்ன சின்ன வாய்ப்புகளை மட்டுமே எப்போதும் பெற்று வருகிறார்கள்.
ஆனால் அப்படி கிடைக்கும் சின்ன கதாபாத்திரங்களில் கூட தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமையை காட்டி மக்களிடம் தங்களை பதிவு செய்துக்கொள்பவர்கள் உண்டு. அப்படியான ஒரு நடிகராகதான் நடிகர் சேத்தனும் இருக்கிறார்.
வெற்றிமாறன் தற்சமயம் இயக்கி வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக சேத்தன் நடித்துள்ளார். விடுதலை படத்தில் இவரின் கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரமாக அமைந்துள்ளது.
பொதுமக்கள் கருத்து:
இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது “வெற்றிமாறன் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெகு வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்காக என்னை போனில் அழைத்தார். அப்போதே எனக்கு தெரிந்தது ஏதோ முக்கியமான கதாபாத்திரமாகதான் இருக்கும் என்று” என கூறியுள்ளார் சேத்தன்.
ஆனால் பொதுமக்கள் இதுக்குறித்து சற்று அதிருப்தி தெரிவித்து வருவதாக சேத்தன் கூறுகிறார். சேத்தன் சார் உங்களின் மீது நாங்கள் அதிக மரியாதை வைத்துள்ளோம். காசு தருகிறார்கள் என்பதற்காக மிகவும் ச்சீப்பான இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காதீர்கள் என நெட்டிசன் ஒருவர் கூறியதாக சேத்தன் பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால் விடுதலை படம் அவருக்கு இன்னும் அதிக வாய்ப்புகளை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.