Connect with us
Chinni Jayanth

Cinema History

என்னது!.. சின்னி ஜெயந்த் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா?!.. அட ஆச்சரியமா இருக்கே!..

காமெடி நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட்., குணச்சித்திர நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் சின்னிஜெயந்த். சன்டிவியில் அசத்தப் போவது யாரு, சகளை ஏள ரகளை என பல தொடர்களில் கலக்கியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இவர் படங்களும் இயக்கியுள்ளார். அப்படியா என ஆச்சரியமா இருக்கா? வாங்க பார்க்கலாம்.

நடிகர் சின்னிஜெயந்த் 1984ல் தமிழ்சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதுவும் முதல் படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம். கை கொடுக்கும் கை படத்தில் தான் இவர் அறிமுகம். ரஜினியைப் போல பல படங்களில் மிமிக்ரி பண்ணி அசத்துவார்.

தன் மகனை ஐஏஎஸ் படிக்க வச்சி கலெக்டர் ஆக்கினார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முதலில் திருப்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை என்னோட வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன் என்றார்.

இயக்குனர் சின்னி ஜெயந்த்

2000த்தில் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் படம் வெளியான உனக்காக மட்டும்.  இது ஒரு காமெடி படம் ஆக எடுத்துள்ளார். ஆனால் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்தப் படத்தில் இவரும் நடித்துள்ளார். 2007ல் சின்னிஜெயந்த் இயக்கத்தில் கானல் நீர் வெளியானது.

Neeye en Kathali

Neeye en Kathali

ஜே.கே.ரித்திஷ் இந்தப்படத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா சட்டர்ஜி. இது மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. 2010ல் சின்னிஜெயந்த் இயக்கத்தில் வெளியான படம் நீயே என் காதலி. இது படுதோல்வி அடைந்தது.

இவர் படங்களை இயக்குவதில் தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் மனதில் இவரது காமெடி என்றும் நிலைத்து நிற்கின்றன. 300க்கும் அதிகமான படங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்கள் நடித்துள்ளாராம். இவர் நடிப்பில் கிழக்குவாசல், இதயம், சின்னபுள்ள ஆகிய படங்களில் செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க… கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..

அதிலும் மனநலம் குன்றியவராக வரும் சின்னபுள்ள படம் இவரது நடிப்பில் பட்டையைக் கிளப்பியது. இந்தப்படத்தில் ரேவதி உடன் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இவரது சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top