மெகா ஸ்டார் பவரை காட்டிய சிரஞ்சீவி! பார்த்து கத்துக்கோங்க தல .. அஜித்துக்காக இறங்கி வந்த சங்கர்தாதா

by Rohini |
ajith copy
X

ajith copy

Ajith Chiranjeevi: இன்று அஜித்தும் தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் சந்தித்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிசியாக நடித்த கொண்டிருக்கும் அஜித் திடீரென சிரஞ்சீவியை சந்தித்து ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அஜித் சூட்டிங்கிற்கு அருகில் தான் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது .

இதை கேள்விப்பட்ட அஜித் திடீரென நேற்று மாலை மரியாதை நிமித்தமாக சிரஞ்சீவியை சந்திப்பதற்காக அவருடைய செட்டிற்கு போய் இருக்கிறார். அதை பார்த்ததும் சிரஞ்சீவிக்கு ஒரே ஆச்சரியமாம். இதற்கு முன் தெலுங்கில் முதலும் கடைசியுமாக அஜித் நடித்த ஒரே திரைப்படம் பிரேம புஸ்தகம். அந்த படத்தின் ஆடியோவை தொடங்கி வைத்ததே சிரஞ்சீவி தானாம்.

இதையும் படிங்க: இனிமே இவங்கதான்!.. மாஸ் கிளப்ப போகும் 5 இளம் நடிகர்கள்!.. அடுத்த தனுஷாக மாறும் லவ்டுடே பிரதீப்!..

அப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இன்று அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படமும் சேர்ந்து ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த நிலையில் சிரஞ்சீவி அஜித்தை சந்தித்துக் கொண்டதன் பிறகு அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார் .

அதில் நேற்று என்னுடைய விஷ்வம்பரா செட்டிற்கு ஒரு ஆச்சரியமான ஒரு விருந்தினர் வந்திருந்தார். அவர் வேறு யாருமில்லை. மிகவும் பாசமுள்ள அஜித் குமார். என் ஷூட்டிங் பக்கத்தில் தான் அவருடைய ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சந்தித்துக் கொண்டதற்கு பிறகு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நடந்த எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

இதையும் படிங்க: இனிமே இவங்கதான்!.. மாஸ் கிளப்ப போகும் 5 இளம் நடிகர்கள்!.. அடுத்த தனுஷாக மாறும் லவ்டுடே பிரதீப்!..

அவருடைய முதல் படமான பிரேம புஸ்தகம். அந்த படத்தின் மியூசிக்கை முதன் முதலில் தொடங்கி வைத்ததே நான் தான். அது மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ஷாலினியும் என்னுடன் சேர்ந்து குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஏராளமான நினைவுகள் எங்களை வந்து தட்டியது.

பல ஆண்டுகளாக அஜித் அடைந்திருக்கும் இந்த நட்சத்திர அந்தஸ்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய ஒரு அழகான ஆத்மாவாக இன்று வரை இருந்து வருகிறார் என சிரஞ்சீவி அவருடைய அனுபவங்களை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் உட்பட எவ்வளவு பெரிய மூத்த நடிகர் சிரஞ்சீவி ?அஜித்தை பார்த்ததும் உடனே அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை பற்றி பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அஜித் தரப்பில் இதுவரை எந்த ஒரு பதிவும் வெளியிடப்படவில்லை என அஜித்தை பற்றி வருத்தத்தில் கமெண்ட்களை தெளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அந்த சூப்பர்ஹிட் படம் தனுஷுக்காக தான் உருவானது… ஆனால்? இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்…

Next Story