அஜித்தை புறக்கணிப்போம்! பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்

by Rohini |   ( Updated:2024-02-22 10:07:20  )
chithra
X

chithra

Actor Ajith: நடிகர் அஜித்தை பற்றி சில தினங்களுக்கு முன் வலைப்பேச்சு அந்தனன் மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது பொதுவாழ்க்கைக்கு என வந்த பிறகு யார் எப்படி போனால் எனக்கென என இருப்பது சரியா? அஜித் சமீபகாலமாக அப்படித்தான் செய்து வருகிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதாவது அஜித்தை புறக்கணிப்போம் என கூறியிருந்தார்.

அஜித்தின் பழைய பேட்டியை எடுத்துக்காட்டி கூறிய அந்தனன் ‘அவரவர் கடமையை சரியாக செய்தாலே போதும்’ என அஜித் அந்த பேட்டியில் கூறியிருப்பாராம். அதை சுட்டிக்காட்டி அஜித் முதலில் அவருடைய கடமையை ஒழுங்காக செய்கிறாரா? பட ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதே இல்லை. எப்பேற்பட்ட பெரிய நடிகர்கள் எல்லாம் எங்கு இருந்தோ வந்து இங்கு ப்ரோமோஷன் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இதையும் படிங்க: சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..

ஆனால் அஜித் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என அக்ரிமெண்டு போட்டுத்தான் படத்திலேயே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இந்திய சினிமாவிலேயே வேறெந்த நடிகரும் இதைப் போல செய்வது இல்லை அஜித்தை தவிற என அந்தனன் கூறியிருந்தார்.

அதோடு விஜயகாந்த் மறைவுக்கு அஜித் வராததை பற்றியும் கூறியிருந்தார். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவருடைய யு டியூப் சேனலில் சில தகவல்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த பட்டன் பிச்சிக்காம பாத்துக்கோ செல்லம்!.. தூக்கலான கிளாமரில் அதிரவிட்ட பிரியாமணி…

அதாவது வலைப்பேச்சு அந்தனன் பேசிய முழு வீடியோவையும் நான் பார்க்கவில்லை. எனினும் நான் பார்த்த சில காட்சிகளில் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ‘யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. எங்கே வர வேண்டும், வரக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். எந்தவொரு நடிகருக்கும் தனிப்பட்ட கொள்கை என ஒன்று இருக்கும். அதன் படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள்’ என கூறினார்.

Next Story