அந்த இயக்குனர் பேச்சை கேட்டா ஜெயிலுக்குதான் போகணும்! – பேரரசு பேச்சுக்கு பதில் கொடுத்த கூல் சுரேஷ்..

by Rajkumar |   ( Updated:2023-03-24 03:54:35  )
அந்த இயக்குனர் பேச்சை கேட்டா ஜெயிலுக்குதான் போகணும்! – பேரரசு பேச்சுக்கு பதில் கொடுத்த கூல் சுரேஷ்..
X

cool suresh perarasu

சமூக வலைத்தளங்கள் சாதரண மனிதர்களாக இருந்த பலரை ட்ரெண்டாக்கி உள்ளது. அப்படி ட்ரெண்டான ஒருவர்தான் நடிகர் கூல் சுரேஷ். சினிமாவில் பல காலமாக இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல படங்களில் இவர் சந்தானத்தோடு சேர்ந்து நகைச்சுவை செய்துள்ளார்.

தீவிர சிம்பு ரசிகரான கூல் சுரேஷ் பிறகு சமூக வலைத்தளங்களில் அதன் மூலமாகவே பிரபலமானார். பிரபலமானதால் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் மாவீரன் பிள்ளை என்கிற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்துக்கொண்டார். இந்த திரைப்படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலெட்சுமி நடித்துள்ளார். அவரே கதையின் முக்கிய கதாபாத்திரமாக இவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்களை பேசினார் கூல் சுரேஷ். வீரப்பனை புகழ்ந்து பல விஷயங்களை அவர் பேசினார். இப்போதைய இளைஞர்கள் வெயிலில் 2 கிலோமீட்டர் நடக்க கூட பயப்படுகிறார்கள். ஆனால் காட்டிலும், மேட்டிலும், வெயிலிலும், மழையிலும் சுற்றி திரிந்த உண்மையான வீரன் வீரப்பன் என அவர் கூறியிருந்தார்.

இயக்குனர் பேரரசும் அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார். அந்த படத்தில் மதுவிற்கு எதிரான ஒரு பாடல் உள்ளது. அதை மதுக்கடையில் பாட வேண்டிய பாடல் என கூறியிருந்தார் பேரரசு.

இதைப்பற்றி கூல் சுரேஷ் கூறும்போது “பேரரசு பேச்சை கேட்டு யாரும் அந்த பாடலை மதுக்கடைக்கு அருகில் சென்று பாட வேண்டாம். பிறகு உங்களை போலீஸ் கைது செய்துவிடும். என் அனுபவத்தில் கூறுகிறேன்.” என கூறியுள்ளார் கூல் சுரேஷ்.

Next Story