பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

by Rohini |
daniel
X

daniel

Actor Daniel Balaji: தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர் நடிகர் டேனியல் பாலாஜி. என்னதான் அவர் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. கமலுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக அந்தப் படத்தில் நடித்து ரசிகர்களின் அபிமானங்களை பெற்றார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு , வடசென்னை, பைரவா, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி நிஜத்தில் ஹீரோவாகவே வாழ்ந்து வந்தார். சொந்தமாக கோயிலை கட்டி மக்களுக்கு அதன் மூலம் உதவி வந்தார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்திருந்தார் டேனியல் பாலாஜி.

திருவான்மீயூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் டேனியல் பாலாஜியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அதன் பிறகு அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வெற்றிமாறன், கௌதம் மேனன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டேனியல் பாலாஜியின் மரணம் திரையுலகினரை மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருக்கு என ரசிகர் பட்டாளம் இருக்கின்றன.

இந்த நிலையில் டேனியல் பாலாஜி அவரது கண்களை தானம் செய்திருந்தார். அதனால் மருத்துவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று டேனியல் பாலாஜியின் கண்களை தானமாக பெற்றனர். இறந்த பிறகும் டேனியல் பாலாஜியின் இந்த செயல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story