ஆட்டமா காட்டுறீங்க? யாருனு தெரியாம மோதுறீங்க! தனுஷ் படத்தில் பூதாகரமாக வெடித்த சம்பவம்

Published on: July 11, 2023
daniel
---Advertisement---

சாணிக்காயிதம் திரைப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகிக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை இயக்கும் பொறுப்பிலும் கவனமாக இருக்கிறார்.

சாணி்க்காயிதம் திரைப்படம் மிகவும் திரில்லர் ஆன மற்றும் அனைவரையும் கொலை நடுங்க வைக்கும் காட்சிகளுடனும் படமாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் தாக்கம் கேப்டன் மில்லர் படத்திலும் இருக்குமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் படம் என்றாலே கொலை, கொள்ளை, மிரட்டல், திரில்லர் என அந்த மாதிரி சம்பவங்கள் தான் ஏராளமாக இருக்கும். அதனால் தான் கேப்டன் மில்லர் படத்திலும் எதிர்பார்க்கின்றனர்.

daniel1
daniel1

இதையும் படிங்க : விழாவுக்கு குடிச்சுட்டு வந்து அட்ராசிட்டி செய்த சீரியல் நடிகை! என்னது ராஜாராணி சீரியலா?

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த பிரபல குணச்சித்திர நடிகரும் வில்லன் நடிகருமான டேனியல் பாலாஜியை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஏற்கனவே டேனியல் பாலாஜி தனுஷுடன் இணைந்து பொல்லாதவன் மற்றும் வடசென்னை போன்ற படங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.

இயல்பாகவே சிறந்த நடிகராக இருக்கும் டேனியல் பாலாஜி பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டு இருந்ததாம். அதற்காக அவரிடம் கால் சீட்டும் வாங்கி இருந்தார்களாம். ஆனால் அவரிடம் கால்ஷீட் வாங்கிக் கொண்டு இதுவரை அவரை கேப்டன் மில்லர் படத்தில் பயன்படுத்தாமலேயே இருந்தார்களாம்.

daniel2
daniel2

இதனால் கடுப்பான டேனியல் பாலாஜி அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான நடிகர். சில நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் அல்லல்படும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் டேனியல் பாலாஜி கால்ஷீட் கொடுத்தும் அவரை பயன்படுத்தாமல் இழுத்தடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : ‘முதல் மரியாதை’ படம் இந்த பிரபலத்தின் உண்மைக் கதையா?.. பல வருடங்களுக்கு பின் வெளிவந்த ரகசியம்..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.