Connect with us

ராஜ்கிரண் மீது மோதிய நபர்.. பாய்ந்து அடிக்கப்போன தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

danush

Cinema History

ராஜ்கிரண் மீது மோதிய நபர்.. பாய்ந்து அடிக்கப்போன தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

திரையுலகில் வினியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராகவும் மாறியவர் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து இவர் சில படங்கள் தயாரித்துள்ளார். அப்படி இவர் ராமராஜனை வைத்து தயாரிக்க நினைத்த திரைப்படம்தான் ‘ராசாவின் மனசிலே’.

இப்படத்தை தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கினார். இதுதான் கஸ்தூரி ராஜாவுக்கு முதல் திரைப்படம். அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் ராஜ்கிரண். சில காரணங்களால் ராமராஜன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக ராஜ்கிரணே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அப்படத்தின் வெற்றி அவரை நடிகராகவே மாற்றிவிட்டது. அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

தன் அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்ததால் தனுஷுக்கு ராஜ்கிரண் எப்போதும் நல்ல மரியாதை உண்டு. எனவே, அவர் முதன் முதலில் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரணையே கதாநாயகனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஜ்கிரணை மிகவும் அன்பாக தனுஷ் கவனித்துக்கொண்டாராம்.

இப்படத்தில் நடித்தது பற்றி தன்னுடைய அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ராஜ்கிரண் ‘இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்றது. ஒரு காட்சி முடிந்து அடுத்தகாட்சிக்கு இடையே ஓய்வு கூட கொடுக்காமல் என்னை அழைத்து நடிக்க வைத்தனர்.

danush

danush

ஒரு காட்சி முடிந்து நான் சிகரெட்டை பற்றவைத்த உடனே அடுத்த காட்சியில் நடிக்க அழைப்பார்கள். எனவே, சிகரெட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடுவேன். இதைப்பார்த்து தனுஷ் கோபப்பட்டு ‘ஐயாவை சிகரெட் குடிக்க கூட விட மாட்டீங்களா?’ என படக்குழுவினரை திட்டினார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம். அதேபோல், ஒரு சிறிய அறையில் படப்பிடிப்பு நடக்கும்போது என்மீது படக்குழுவை சேர்ந்த ஒருவர் மோதிவிட்டு கடந்து சென்றார். இதைப்பார்த்து கோபமடைந்த தனுஷ் அவரை அடிக்க பாய்ந்தார்’ என ராஜ்கிரண் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top