காசிக்கு போன தாத்தா எப்படி வராருனு தெரியுமா? ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் களைகட்டப் போகும் எபிசோடு

by Rohini |   ( Updated:2023-09-03 03:07:39  )
pandavar
X

pandavar

சன் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சன் டிவியில் நாள்தோறும் பிற்பகல் 1.30 மணியளவில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த பாண்டவர் இல்லம் சீரியலில் சமீப காலமாக ஒரு சில தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பார்க்கும் ரசிகர்களுக்கும் போர் அடித்து விட்டது. பாண்டவர் இல்லம் சீரியலில் ஆரம்பத்தில் பெரிய சுந்தர பாண்டவராக நடிகர் டெல்லி குமார் நடித்திருந்தார்.

இதையும் படிங்க : அரவிந்த்சாமி அப்பாக்கு ரஜினி கொடுத்த மரியாதை! வாயடைத்து நின்ற ‘மெட்டிஒலி’ சிதம்பரம்

அந்த வீட்டிலேயே தாத்தாவாக மிக மரியாதையுடன் நடத்தப் பட்ட டெல்லி குமாரை காசிக்கு அனுப்பி விட்டதாக சொல்லி கதையில் இருந்தே தூக்கி விட்டார்கள். ஆனால் அதற்கு பின் இருக்கும் காரணத்தை டெல்லி குமாரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது 80 வயதை
நெருங்கிய டெல்லி குமார் கொரானா காலத்தில் கொரனாவால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

அப்போது அவரின் உடல் நலம் கருதி மருத்துவர்கள் ஒரு வருடம் ஓய்விலேயே இருக்க சொல்லியிருக்கிறார்கள். இதை பாண்டவர் இல்லம் சீரியலின் தயாரிப்பாளரிடம் டெல்லி குமார் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் டெல்லிகுமார் சொன்னாராம்.

இதையும் படிங்க : வீணா சிம்புவை சீண்டி பல கோடி போச்சி!.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!..

ஆனால் தயாரிப்பாளர் அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை தவிர யாராலும் நடிக்க வைக்க முடியாது என்று சொல்லி காசிக்கு போனதாக சீரியலில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் டெல்லி குமாரை மீண்டும் அந்த சீரியலில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

இந்த மாத இறுதியில் அந்த கதாபாத்திரத்தை சீரியலுக்குள் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் எந்த மாதிரி காசியிலிருந்து வரப் போகிறார் என்றும் தெரியவில்லை என்று டெல்லி குமார் கூறினார்.

Next Story