Vijay:
விஜயுடன் கிட்டத்தட்ட 26 படங்களில் நடித்து விஜய்க்கு ஒரு நண்பனாகவே வலம் வந்தவர் நடிகர் தாமு. அதுவும் விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்தே தாமு விஜயுடன் டிராவல் செய்து வருகிறார். அதனால் விஜயின் ஒவ்வொரு அசைவுகளையும் அருகில் இருந்து பார்த்தவர் தாமு. விஜய் நடித்த படங்களில் பெரும்பாலும் நண்பன் கேரக்டரில்தான் தாமு நடித்திருப்பார்.
விஜய் தாமு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காதலுக்கு மரியாதை திரைப்படம்தான். ஆனால் இது போன்ற பல படங்களில் நண்பனாக நடித்துள்ளார். இந்த நிலையில் விஜயின் ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்தது? இப்போது விஜயை எப்படி பார்க்கிறேன் என தாமு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நாளைய தீர்ப்பு படம் சுமாரான வெற்றியை பெற்றாலும் எஸ்.ஏ.சியை அந்தப் படத்தில் மக்கள் பாராட்டினார்கள் என தாமு கூறியிருக்கிறார்.
ஒரு திரையரங்கில் நாளைய தீர்ப்பு படத்தை மக்களோடு மக்களாக பார்க்க சென்றிருக்கிறார்கள் படக்குழு. அப்போது ஒரு வயதான அம்மா எஸ்.ஏ.சி அருகில் வந்து ராசா படம் நல்லா இருக்கு. நீயும் நல்லா இருக்கணும் என்று சொல்லியிருக்கிறார். அப்போது தியேட்டர் பால்கனியில் இருந்த விஜயை கீழே வரச்சொல்லி , இவன் சினிமாவிற்கு வர்றான். நீங்க நல்லா பாத்துப்பீங்களா என்று எஸ்.ஏ.சி கேட்டாராம்.

ராசா நீ அனுப்பி வை.. கவலைப்படாதே என சொல்லியிருக்கிறார் அந்த அம்மா. ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு ஒரு பிரபல பத்திரிக்கை விஜயை தாறுமாறாக விமர்சித்து எழுதியிருக்கிறார்கள்.ஒரு கலைஞனை எந்தளவுக்கு கீழ்த்தரமாக எழுத வேண்டுமோ அப்படி எழுதியதாக தாமு கூறினார். அதனால் விஜய் மிகவும் அப்செட் ஆகி அவர் வீட்டிற்குள் உட்கார்ந்துவிட்டாராம்.
அவரை பார்க்க தாமு போக, விஜயின் அம்மா ஷோபா, விஜய் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் போய் பாரு என கூறியிருக்கிறார். விஜயை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த பத்திரிக்கை உன்னை கீழ்த்தரமாக எழுதியதோ ஒரு நாள் அதே பத்திரிக்கை சூப்பர் ஸ்டார் என எழுதும் என தாமு கூறியிருக்கிறார். சொன்னப்படி இன்று விஜயின் இடம் என்பது மிகவும் பெருசாகிவிட்டதே என பெருமையாக தாமு பேசியுள்ளார்.
ஆனா சார், முதல் படத்திற்காக சம்பளம் வாங்கியதும் விஜய் என்ன பண்ணார் தெரியுமா? அப்பவே சேலை, மளிகை சாமான்கள், அரிசி, பருப்பு என வாங்கிக் கொண்டு ஏராளமானோருக்கு கொடுத்தார் என தாமு கூறினார்.
