Connect with us
dhanush

Cinema News

நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணி செம பிஸியான தனுஷ்… கேட்கவே சும்மா அதிருதே!..

நடிகர் தனுஷ் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Actor Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வழங்கப்படும் நடிகர் தனுஷ்.  தற்போது நிற்கக்கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள், மற்றொரு பக்கம் தனது இயக்கம் என்று இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

இதையும் படிங்க: உலகத்தரத்துடன் கூடிய ஆடம்பர அபார்ட்மெண்ட்!.. சென்னையில் குடியேறும் ராஷ்மிகா?!..

சர்ச்சையில் தனுஷ்:

தனது விவாகரத்திற்கு பிறகு தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வரும் நடிகர் தனுஷுக்கு எப்போதும் அவரைச் சுற்றி சில சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து மூன்று பக்கத்திற்கு காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

nayanthara

nayanthara

நயன்தாராவின் டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார் நடிகை நயன்தாரா. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நயன்தாராவை பதிலளிக்க கோரி உத்தரவிட்டுள்ளது.

தனது படங்கள்:

நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் தற்போது நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார்.

இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்திலிருந்து பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

மற்ற இயக்குனர்களின் படங்கள்:

ஒரு பக்கம் தனது இயக்கத்தில் பிஸியாக இருந்தாலும், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.

dhanush

dhanush

இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: பாக்கியராஜிடம் எம்ஜிஆர் சொன்ன கறாரான விஷயம்… அப்படி வந்தது தான் அந்த சூப்பர்ஹிட் படம்!

ஹிந்தி திரைப்படம்:

ஹிந்தியில் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப், ஆத்ரங்கி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் தனுஷ் அதனைத் தொடர்ந்து தேரே இஷ்க் மெய்ன் என்ற திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் மீண்டும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இயக்குனர் ஆனந்த் எல் ராயை தனுஷ் சந்தித்து இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top