ரஜினியின் பேரனுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. சத்யராஜ் சொன்னதை உண்மையாக்கிய தனுஷ்!..

dhanush
தமிழ் சினிமாவில் மேடைகளில் பேசும் போது சற்று கவனமாக பேசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மேடைப்பேச்சு சும்மா அலங்காரப் பேச்சு என்பதை உண்மையாக்கினால் நம் மரியாதையை நாமே இழந்துவிடுவதற்கு சமமாகி விடும். அப்படி ஒரு நிலைமை தான் இப்போது நடிகர் தனுஷுக்கு வந்திருக்கிறது.

dhanush
ஏற்கெனவே ஒரு மேடையில் சத்யராஜ் பேசும் போது நடிகர்கள் எல்லாம் நீங்கள் நினைக்கிற அளவுக்கு அறிவாளிகள் இல்லை என்றும் அவர்கள் என்னமோ விஞ்ஞானிகள் போல் இருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டியது அவசியமில்லை. நடிகர்களுக்கு தெரிந்தது ஒன்று சினிமா மட்டும் தான் என்று கூறியிருக்கிறார்.
அதை நிரூபிக்கும் பொருட்டு தனுஷ் தனது வாத்தி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும் போது அவர் பேசிய சில கருத்துக்கள் முகம் சுழிக்க வைத்தது. அதாவது தனுஷ் படிக்கும் போது அவரது அப்பாவால் பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததாம்.

dhanush
ஆனால் அது இப்பொழுது என் மகனுக்கு நான் பள்ளிக் கட்டணம் செலுத்தும் போது தான் புரிகிறது என்று கூறியிருக்கிறார். இந்த கருத்து அவரை சுற்றி இருக்கிறவர்கள் மட்டும் இல்லை, சாதாரண ரோட்டில் அலைபவர்களையும் சிரிக்க வைத்து விடும். தனுஷின் மகன் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ரஜியின் பேரன் என்று நினைத்துப் பார்க்கும் போது தனுஷ் சொன்னதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை என்பது தான் புரிகிறது.
இதை அவ்ளோ பேர் கூடியிருந்த மேடையில் சொல்லிவிட்டு குபீர்னு சிரித்தும் கொண்டார் நடிகர் தனுஷ். இப்படி மேடைக்காக ஒரு பெரிய பொய்யை சொன்னால் நாளைக்கும் சொல்ல வேண்டிய விஷயத்தையும் யாரும் கேட்காமல் தான் போவார்கள்.

dhanush
ஆனால் தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தாலும் இப்பொழுது வரை தான் சம்பந்தப்பட்ட படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தன் மகன்கள் இருவரையும் அழைத்து தன் இருபக்கமும் இரு பெரும் பில்லர்கள் போல் அமரவைத்து விடுவார் தனுஷ்.
இதையும் படிங்க : கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கியது அவருக்கே தெரியாதாம்… இது என்ன புது மேட்டரா இருக்கு!!