அச்சு அசல் அப்படியே இருக்காரே! இவர் இல்லைனா தனுஷ் இல்ல - வைரலாகும் டூப் நடிகரின் புகைப்படம்
Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பிற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த ஒரு நடிகராகவே சமீபகாலமாக தனுஷ் காணப்படுகிறார். அதற்காக அவரிடம் ஏராளமான மாற்றங்கள் அண்மைக்காலமாக காணப்படுகின்றன.
ஆன்மீகம், நடிப்பு, புத்தகம் வாசித்தல் என தனுஷிடம் காணப்படும் இந்த மாற்றங்களை பார்த்து திரைப்பிரபலங்களே ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஹாலிவுட் என இந்திய அளவில் ஒரு பேசப்படும் நடிகராக தனுஷ் மாறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது நடிப்பில் ஒரு அசுரத்தனம் இருப்பதால் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பிடித்தமான கலைஞராகவே தனுஷ் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தனுஷை ஒரு சிறந்த நடிகர், மாஸ் நடிகர் என்று காட்டிய படமாக வட சென்னை திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தில் இருந்தே தனுஷ் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை காட்ட ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் வடசென்னை படத்தில் இருந்தே தனுஷுக்கு டூப் போட்டு நடித்தவர் சையது என்ற டூப் நடிகர்.
இதையும் படிங்க: குட்ட கவுன்ல கண்ணுக்கு குளுகுளுன்னு இருக்கு!.. ரசிகர்களை ஜில்லாக்கிய கேப்ரியல்லா…
அவர் முதலில் காஸ்டிங்கில் இருந்தாராம்.அவரின் தோற்றத்தை பார்த்த வேல்ராஜ் அப்படியே தனுஷ் மாதிரி இருப்பதை உணர்ந்து வடசென்னை படத்தில் தனுஷுக்கு டூப் போட வைத்திருக்கிறார். அதிலிருந்து இப்போது வரைக்கும் அதாவது கேப்டன் மில்லர் பட வரைக்கும் இவர்தான் தனுஷுக்கு டூப் போட்டுக் கொண்டு வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் தனுஷின் 50வது படத்திலும் இவர்தான் டூப் போட்டிருக்கிறாராம். 51 வது படத்திலும் தன்னையேத்தான் அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.