தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையே வெடித்த மோதல் தமிழ் சினிமாவையே பரபரப்பில் ஆழ்த்திய போது தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளிவரவில்லையே என அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதை கடந்து போறது தான் வாழ்க்கை என்பதைப் போல தனுஷின் ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.
நயன்தாராவின் ஆவணப்படம் சில தினங்களுக்கு முன் நெட்ஃபிளிகிஸில் வெளியானது. அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளையும் பாடல்களையும் சேர்க்கும் பட்சத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் இருந்து என்ஓசி பெறுவதற்காக நயன்தாரா கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் காத்திருந்தார்.
ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அவர் என்ஓசியும் கொடுக்கவில்லை. அதனால் சில மாதங்களுக்கு முன் நயன்தாராவின் அந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அந்த ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் மூன்று வினாடி இடம் பெற்றிருந்தது .அதனால் இதை எதிர்த்து தனுஷ் நீதிமன்றத்தை நாடினார்.
இதையும் படிங்க: மீண்டும் சிக்கலில் மீனா… பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்.. பிடிவாதமாக இருக்கும் பாக்கியா!..
பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்திருந்தார். இது நயன்தாராவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது .அதன் விளைவாகத்தான் ஒரு பெரிய அறிக்கையை தனுஷுக்கு எதிராக நயன்தாரா அவருடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாறியது .அதில் தனுஷால் நானும் எனது கணவர் விக்னேஷ் சிவனும் மன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் துறை ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டோம் என குறிப்பிட்டு அவருடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக இது பற்றிய செய்தி பெரிய அளவில் பேசப்பட்டும் தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் நயன்தாராவின் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்று ரிலீஸ் ஆனது. இதை எதிர்த்து தனுஷ் என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டாரா ஞானவேல் ராஜா?… சிவா பண்ண வேலை!… பொங்கிய பயில்வான்!…
ஆனால் அதற்கும் தனுஷ் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையில் இன்று தனுஷின் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது .அவர் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்து முடிந்து தற்போது ஒட்டுமொத்த படக் குழுவும் பாங்காங் சென்று இருக்கிறது. அந்த படப்பிடிப்பில் சிறுவர்களுடன் தனுஷ் விளையாடுவது போல ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: https://www.instagram.com/reel/DClKmzJSKnN/?igsh=NmMyNnhrYXZ4MDVw
