தமிழ் அகராதியிலேயே இல்ல! செல்போனுக்கு இப்படி ஒரு பொருள் இருக்கா? இலக்கியவாதிகளை திணறடித்த தனுஷ்

Actor Dhanush: தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். அவர் ஆரம்பகாலத்தில் இருந்ததற்கும் இப்போது இருக்கும் தனுஷுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

அதை அவர் ஏற்று நடித்து வரும் சமீபகால கதாபாத்திரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அசுரன், கர்ணன் இப்போது கேப்டன் மில்லர் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் சமூக சிந்தனையுள்ள ஒரு மனிதர் தனுஷ் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

இதையும் படிங்க: என்ன செல்லம் இப்படி மாறிட்ட!.. பாதி கிழிச்ச டிரெஸ்ல பலான போஸ் தந்த சீரியல் நடிகை…

முற்போக்கு வாதியாகவே இருக்கிறார் என்று பல பேர் அண்மைக் காலமாக கூறி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவரின் புத்தக வாசிப்பு பழக்கம்தான். அதை ஒரு பேட்டியில் தனுஷ் சொல்லியே கேட்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் தனுஷ் மொபைல் போன் பயன்படுத்துவதையே தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனுஷை பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை வலைப்பேச்சு அந்தனன் சமீபத்திய பேட்டியில் கூறினார். அவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?

இந்தப் படத்தில் ஆலய நுழைவு தடை பற்றிய கருத்தை ஆணித்தரமாக விளக்குகிறது. எப்படி இந்த மாதிரியான படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்ற ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் தனுஷின் இந்த மாற்றம் குறித்து ஒரு புத்தக எழுத்தாளர் சொன்ன ஒரு விஷயத்தை அந்தனன் கூறினார்.

தனுஷிடம் அந்த புத்தக எழுத்தாளர் ஒரு சமயம் பேட்டி எடுத்த போது ஒரு கேள்வி கேட்டாராம். அதாவது செல்போனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு தனுஷ் ஒரே வார்த்தையில் ‘ நேரத்திருடன்’ என பதிலளித்திருக்கிறார். இந்த பதிலை கேட்டதும் அந்த புத்தக எழுத்தாளர் ‘இலக்கியவாதிகளுக்கே இந்த வார்த்தை புதியதாகத்தான் இருக்கும். ஆனால் தனுஷ் எப்படி இதை சொன்னார்’ என ஆச்சரியத்துடன் கூறினாராம்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

 

Related Articles

Next Story