மருத்துவமனையில் இயக்குனர்!. மொத்தமா தூக்கி கொடுத்துட்டாரே தனுஷ்!.. பெரிய மனசுதான்!….

#image_title
கோலிவுட்டில் ஒரு முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றிருக்கிறார். அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றுக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் அவரே கற்றுக்கொண்டு தன்னை தானே மெருகேற்றிக்கொண்டார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை.
ஒருபக்கம் தனுஷு மிகவும் பிஸியாக சினிமாவில் இயங்கி வருகிறார். திருச்சிற்றம்பலம் முடித்தவுடன் ராயன் படத்தை இயக்கி நடித்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை முடித்த கையோடு இட்லி கடை படத்தை இயக்கபோனார். அந்த படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

அதோடு, ஏற்கனவே இயக்கி வந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் சமீபத்தில் செய்த உதவிதான் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
தனுஷை வைத்து படமெடுத்த இயக்குனர் ஒருவருக்கு சிறு நீரகப் பிரச்சனை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 25 லட்சம் பில் வந்திருக்கிறது. இயக்குனரின் நண்பர்கள் பல வகைகளில் முயன்றும் அவ்வளவு பணத்தை ரெடி பண்ண முடியவில்லை. எனவே, தனுஷிடம் உதவி கேட்போம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் தனது கிரெடிட் கார்டை கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார். தனுஷின் நல்ல மனதை அந்த இயக்குனரின் நண்பர்கள் மனமார பாராட்டி வருகின்றனர்.