Connect with us
aravind swamy

Cinema News

அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

Actor Aravind Swamy: தளபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ஆனால் அப்படத்தில் துணை நடிகராகவே நடித்திருந்தார். இவரை கதாநாயகனாக காட்டிய படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா. கதாநாயகனாக அறிமுகமான முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

பின் இவர் நடித்த பம்பாய், மின்சார கனவு போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை தேடி தந்தன. அதன்பின் நடித்த கடல், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. பின் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்திய தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:லியோ வசூல் 500 கோடி தான்… ஆனா தளபதியை அசிங்கப்படுத்த களமிறங்கிய போட்டி நடிகர்..!

இது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று தந்தது. கதாநாயகனாய் இருந்த அரவிந்த்சாமியை வில்லனாக காட்டிய திரைப்படம்தான் தனி ஒருவன். இப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது வில்லதனமான நடிப்பினால் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். அதன்பின் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தார். இவ்வாறு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருந்தன. ஆனால் அவர் அவை அனைத்தையும் நிராகரித்து வருகிறார்.

லியோவுக்கு பின் விஜய் நடிக்கும் திரைப்படம்தான் தளபதி 68. இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அரவிந்த்சாமிதான் நியமிக்கப்பட்டார். பின் அப்படத்தில் இருந்து அரவிந்த்சாமி விலகிவிட்டாராம். அதனால் தற்போது அப்படத்தில் வில்லனாக மோகன் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் இதன்பின் ஒரு காரணமும் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இதையும் வாசிங்க:தேர இழுத்து தெருவுல விட்ட கதையா இருக்கு!… புது பஞ்சாயத்துக்கு ரெடியாகும் லலித்…

திரைப்படங்களில் நடித்துவந்த அரவிந்த்சாமி தற்போது இயக்குனராக ஆகப்போவதாகவும் அப்படத்தில் ஃபகத் ஃபாசில் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இவர் இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முதலில் நடிகர் தனுஷிடம் கேட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ் அரவிந்த் சாமி இப்போதுதான் அறிமுகமாவதால் நன்றாக படம் இயக்கமாட்டாரோ எனும் எண்ணத்தில் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் அரவிந்த்சாமியோ இப்படத்தின் கதையை 5 ஆண்டுகளாய் திட்டிமிட்டு வருகிறாராம். அதனால் இப்படம் இவருக்கு கண்டிப்பாக வெற்றியை தேடி தரும் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் வாசிங்க:அடுத்த ஆடு சிக்கிடுச்சு!.. லிப் லாக் முத்தத்துடன் புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top