Cinema News
உங்க தாத்தா தான் அப்படி… நான் இல்லை.. மகனிடம் ரஜினியை பற்றி கூறிய தனுஷ்…
தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவின் ஹாலிவுட் நாயகனாக அனைவரையும் பெருமை பட வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். எண்ணம் போல் வாழ்க்கை என்ற தத்துவத்தை பின்பற்றி வரும் தனுஷ் சமீபத்தில் அவரின் படமான திருச்சிற்றம்பலம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வரும் நடிகர் தனுஷின் மூத்த மகன் அவன் படிக்கும்
பள்ளியில் கேப்டனாக பொறுப்பேற்ற விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டது பார்த்த அனைவருக்கும் ஒரு வித
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்களேன் : விஜய் முகத்தில் எக்ஸ்பிரஷனே இல்லை…! சொல்கிறார் பீஸ்ட் நடிகர்…
விவாகரத்து கோரி இருவரும் பிரிந்து வந்த நிலையில் இப்படி பட்ட சூழ்நிலையில் ஒன்றாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனுஷின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்களேன் : அமீர், பாவனி பண்றத பாத்து பாத்து ரசிக்கும் பிரியங்கா…
அவரது இளையமகன் சிறு வயதில் இருக்கும் போது எல்லா பொருள்களையும் போட்டு உடைப்பாராம்.அதுவும் விலையுயர்ந்த பொருள்களையா பார்த்து பார்த்து உடைப்பாராம். அப்போது தனுஷ் தன் மகனிடம் எப்பா உன் தாத்தா தான் சூப்பர் ஸ்டார். உன் அப்பா இல்லை பா என்று கூறுவாராம். இந்த வீடியோ தான் இப்போது டிரெண்டாகி வருகின்றது.