அந்தப் படம்தான் காப்பாத்துச்சு.. அயோத்தியில் சிக்கி திணறிய தனுஷ்! தப்பிச்சேன்டா சாமி

Published on: January 24, 2024
dhanush
---Advertisement---

Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். நடிகர் என்பதையும் தாண்டி ஆன்மீகத்திலும் தனுஷிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. அதுவும் ரஜினியின் மேனரிசத்தை பின்பற்றி வருவதாகவும் தனுஷ் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்று சினிமாவி நடிக்க வரும் ஒவ்வொரு கலைஞனிடமும் ரஜினியின் மேனரிசம் இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் தனுஷிடம் இருக்காதா என்ன? சமீபத்தில் கூட அயோத்திக்கு ரஜினி , லதா மற்றும் தனுஷ் , அவரின் மகன்கள் என குடும்பமாக சென்றனர்.

இதையும் படிங்க: ஐட்டம் டான்ஸுக்காக டாப் நடிகைகள் வாங்கிய சம்பளம்! அப்பவே 80 லட்சம் வாங்கி அசத்திய மீனா

கோலிவுட் மட்டுமில்லாது பல மாநிலங்களில் இருந்து திரைப்பிரபலங்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்தியா சினிமாவின் ஐகானாக திகழும் ரஜினி மற்றும் அமிதாப் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகில் சச்சின் டெண்டுல்கரும் அமர்ந்திருந்தார்.

இப்படி இந்தியாவின் மிக முக்கிய பிரபலங்களுக்கு முன் இருக்கையில் அமரும் விதத்தில் சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் தனுஷை யார் என்றே அங்கு இருந்தவர்களுக்கு தெரியாது. அதுவும் பார்ப்பதற்கு பெரிய தாடி மீசை எல்லாம் வைத்திருந்த தனுஷை நம்மூர் ஆட்கள் இருந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கையில் அங்கு இருக்கிறவர்களுக்கு எப்படி தெரியும்?

இதையும் படிங்க: இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..

அதனால் ஒரு கூட்டத்தில் சிக்கி தவித்தாராம் தனுஷ். அருகே போலீஸ்கள் இருந்தும் அவர்களுக்கு தனுஷ் யார் என்பதே தெரியாது. அதன் பிறகு இன்னொரு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து தனுஷை பார்த்து இவர் நடித்த ஹிந்தி படத்தை நினைவு கூர்ந்து அதன் பிறகே அவரை பத்திரமாக அனுப்பியிருப்பதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.