
Cinema News
ஐய்யய்யோ தனுஷா…? பாத்து பயந்த நடிகை….! மனுஷன் என்ன செஞ்சாருனு தெரியலயே…!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொட்டதெல்லாம் ஹிட் என்பது மாறி இவரின் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றன. மாறன் படம் இதற்கு விதிவிலக்காக அமைந்தது. மேலும் தனுஷின் ஹாலிவுட் படம் ’கிரே மேன்’ ட்ரெய்லர் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த டிரெய்லரில் தனுஷை இரண்டு காட்சிகளில் மட்டுமே காட்டியிருப்பர்.
விசாரித்ததில் டிரெய்லர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் படத்தில் ஒரு கூட்டத்தின் தலைவனாக இருக்கிறாராம் நடிகர் தனுஷ். மேலும் ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுரை அன்பு என்ற தயாரிப்பாளருடன் தனுஷ் இணைந்து ஒரு படத்தை இயக்கி அவரே படத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் நடிக்க போனிகபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரை நடிக்க வைக்க தனுஷ் விருப்பப்பட்டாராம்.
ஆனால் போனிகபூர் தனுஷா வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதே போனிகபூர் தான் தன் மனைவி எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினாரோ அந்த அளவிற்கு தன் மகளையும் கொண்டு வரவேண்டும் என நினைத்து கொண்டிருக்க தனுஷ் படம் என்று சொன்னதும் பின்வாங்கிவிட்டார். மேலும் ஏற்கெனவே தனுஷ் ஹிந்தியில் அத்ராங்கிடரே என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதில் சாராலிகான் ஜோடியாக நடித்திருப்பார்.
ஆனால் அவருக்கு முன் ஜான்வி கபூர் தான் கமிட் ஆனாராம். தனுஷும் நடிக்கிறார் என்று தெரிந்த பிறகு ஜான்வி கபூர் விலகி கொண்டாராம். தமிழ் சினிமாவில் தன் மகளை எப்படியாவது உள் நுழைக்க வேண்டும் என விருப்பப்படும் போனிகபூர் தனுஷை பார்த்து மிரளுவது ஏன் என்று தெரியவில்லை.