More
Categories: Cinema History Cinema News latest news

சான்ஸ் கிடைக்காமல் திணறிய செல்வராகவன்..! –  அண்ணனுக்காக தயாரிப்பாளரிடம் கை ஏந்திய தனுஷ்…

சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தின் கதை மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவராக இருக்கிறார்.

அந்த ஈடுபாட்டின் காரணமாகவே தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என பல இடங்களில் கால் பதித்துள்ளார் தனுஷ். தற்சமயம் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தனுஷ் நடித்த நானே வருவேன், திருச்சிற்றம்பலம் இரு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. 

Advertising
Advertising

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக தனுச்ஷை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரது அண்ணன் செல்வ ராகவன். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் புதுப்பேட்டை, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்தார். புதுப்பேட்டை திரைப்படம் தனுஷ் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

செல்வராகவனுக்கு ஏற்பட்ட சங்கடம்:

அப்போதைய கால கட்டங்களில் செல்வராகவன் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்தாலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரது திரைப்படங்கள் பல பெரும் வெற்றியை கொடுக்காமல் போனது. 2021 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதை அடுத்து சினிமாவில் வாய்ப்புகளே வராத நிலையை அடைந்தார் செல்வராகவன்.

நடிகர் தனுஷ் செல்வராகவன் மீது பெரும் அன்பு கொண்டிருந்தார் எனவே செல்வராகவனுக்கு உதவ வேண்டும் என நினைத்தார். அப்பொழுது தயாரிப்பாளர் தலைப்புலி எஸ்.தாணுவிடம் பழக்கத்தில் இருந்தார் தனுஷ் எனவே அவரிடம் சென்று தனது அண்ணனுக்கு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என கேட்டுள்ளார் தனுஷ்.

கலைப்புலி எஸ்.தாணுவும் அதற்கு ஒப்புக்கொள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் அப்பொழுது கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்ததால் இரண்டு திரைப்படங்களிலும் தனுஷ் ஒரே நேரத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த படம்தான் தற்சமயம் புதுப்பேட்டை இரண்டாம் பாகமாக மாறி உள்ளது.இந்த விஷயத்தை கலைப்புலி எஸ்.தாணு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 17 வயதிலேயே எம்.ஜி.ஆருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த கமல்!.. எந்த படம் தெரியுமா?

Published by
Rajkumar

Recent Posts