இதுவரை நடிக்காத கேரக்டர்! ‘கேப்டன் மில்லர்’ ட்ரெய்லரே இன்னும் ஒய்ந்தபாடில்லை - தனுஷ் கொடுத்த ஷாக்

by Rohini |
dhanush
X

dhanush

தமிழ் சினிமாவின் ஒரு ஆகச் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். எல்லையில்லா வளர்ச்சி இவரை ஒரு நடிகன் என்பதன் அடையாளமாகவே காட்டுகிறது. இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு திறமை பகுத்தறியும் திறன் போன்றவைகளை பெற்றவராக தனுஷ் இருக்கிறார். சமீப காலமாகவே இவர் தேர்ந்தெடுக்கும் கதை இவரை இன்னும் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறது.

dhanush1

dhanush1

சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஷாக்கை ஏற்படுத்தி இருந்தார் தனுஷ். வழக்கமான தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் அனைவரையும் அந்த ட்ரெய்லரில் மிரட்டி இருக்கிறார் தனுஷ்.

டிரைலரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் எப்பொழுது படத்தை பார்க்கப் போகிறோம் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்க இருக்கிறாராம்.

dhanush3

dhanush3

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஏற்கனவே நாகர்ஜுனா தோழா படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கிட்டத்தட்ட அதே மாதிரியான கதாபாத்திரம் தான் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிங்க : ஒரு படம் ஹிட்டுன்னா இப்படியா?… தாறுமாறா சம்பளத்தை ஏத்திய சந்தானம்!.. ஷாக்கில் திரையுலகம்..

அதுமட்டுமில்லாமல் இதுவரை தனுஷ் நடித்த கேரக்டரிலேயே இந்த தெலுங்கு படத்தில் அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாம். இதுவரை நடிக்காத கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

Next Story