More
Categories: Cinema News latest news

லோகேஷ் எப்படிடா சினிமாவுக்குல்ல வந்தான்.! காமெடி நடிகரிடம் நொந்து கொண்ட தளபதி விஜய்.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நபர்களில் மிக முக்கியமானவர் தளபதி விஜய். இவருடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்பவர்கள், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஒருவரிடம் பழகிவிட்டால் அவரிடம் தன் நண்பனை போல வெகு சகஜமாக பழகுவார் என்று கூறுவார்கள்.

Advertising
Advertising

அப்படித்தான் விஜய் டிவி பிரபலமான தீனா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அவர் மாஸ்டர் பட சமயத்தில் விஜயுடன் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய்  ஜாலியாக பேசுவாராம். ஒரு சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி தீணாவிடம் தளபதி விஜய் கூறியுள்ளார். அதாவது, ‘ இவன் எப்படிடா சினிமாவுக்குள் வந்தான்.

சினிமாவுக்கு இயக்குனராக வர வேண்டுமென்றால், யாரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் ஒரு குறும்படம் எடுத்து அதன் மூலம் பிரபலமாக வேண்டும்.

இதையும் படியுங்களேன் – ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு விருந்து.! நயன் – விக்கி தம்பதியினர் செய்த புண்ணிய காரியம்.!

ஆனால், இவன் ஏதோ நான்-லீனியர் கதை களத்தில் ஒரு படத்தை எடுத்து, அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களாக இயக்கி வருகிறான். எனக்கு வசனம் தர மாட்டேங்குறான். ஸ்பாட்டில் வந்து எழுதி தருகிறான். என செல்லமாக லோகேஷ் பற்றி கம்ப்ளைன்ட் செய்துள்ளார் தளபதிவிஜய். இதனை நடிகர் தீனா கலகலப்பாக ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

Published by
Manikandan

Recent Posts