கமல் படத்தில் நடிக்க எனக்கெதிராக திரண்ட கோடம்பாக்கம்! ஏன்னு தெரியுமா? தியாகு ஓப்பன் டாக்

by Rohini |
kamal
X

kamal

தமிழ் திரையுலகில் கமல் ஒரு பெரிய ஆளுமையாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளையும் கடந்து தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் ஒரு ஐகானாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே இவரைப் பார்த்த பல பேர் அப்பவே இவரை பற்றி கணித்திருக்கிறார்கள்.

டஃப் கொடுக்கும் கமல்

அந்த அளவுக்கு சிறு வயதிலேயே சினிமாவைப் பற்றிய நுணுக்கங்கள் பகுத்தறியும் திறன் கொண்டவராகவே இருந்திருக்கிறார் கமல். 200 படங்களை தாண்டி இன்றும் ஒரு மாபெரும் நடிகராக விளங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இன்றைய இளம் தலைமுறைக்கு கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே ஒரு போட்டியாளர்களாக தான் தெரிகிறார்கள்.

kamal1

kamal1

ரஜினி கமல் காலத்திற்கு முன்பு வரை சினிமாவிற்கு நடிக்க ஆசைப்பட்டு வரும் அனைவருமே எம்ஜிஆர் படங்களில் சிவாஜி படங்களில் நடித்திட வேண்டும் என்று விரும்புவார்கள் .ரஜினி கமல் வந்த பிறகு ரஜினி கமல் படங்களில் ஒரு கதாபாத்திரமாவது நடித்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

முதல் வாய்ப்பு

அந்த வகையில் வந்த வாய்ப்பு பறிபோன ஒரு சம்பவம் நடிகர் தியாகுக்கு கிடைத்திருக்கின்றது. ஏன் அந்த வாய்ப்பு பறிபோனது என்பதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் நடிகர் தியாகு. நடிகர் தியாகுவை பெரும்பாலும் ரஜினி விஜயகாந்த் ஆகியோரின் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். கமலுடன் அவர் இதுவரை நடித்ததே இல்லை. ஆனால் ஒரு வாய்ப்பு அவருக்கு வந்ததாம். கமல் நடித்த காதலா காதலா படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு தியாகுக்கு வந்திருக்கிறது.

அந்தப் படத்தில் டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது தியாகுதானாம். படத்தின் தயாரிப்பாளர் தேனப்பனும் தியாகுவை ஓகே செய்துவிட்டு போக மறுநாள் கமல் மற்ற நடிகர்களான வடிவேலு பிரபுதேவா ஆகியோரும் ஷூட்டிங்க்கு வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாம்.

அதனால் தியாகுவை கமல் படத்தில் நடிக்க கூடாது என பாரதிராஜா செல்வமணி ஆகியோர் தடுத்து இருக்கிறார்கள். அதற்கு தியாகு எனக்கு வந்த ஒரே வாய்ப்பு இதுதான் இதையும் நடிக்க கூடாது என்று சொல்கிறீர்களே என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் கேட்கவில்லையாம்.

kamal2

kamal2

கமலிடம் நேராக கூறிய தியாகு

சரி படப்பிடிப்பிற்கு சென்று நான் வரமாட்டேன் என்றாவது சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் தியாகு. அதற்கும் அனுமதிக்க வில்லையாம். உடனே படப்பிடிப்பிலிருந்து வடிவேலு பிரபுதேவா மாறி மாறி தியாகுவிற்கு போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்களாம்.
அதன் பிறகு பாரதிராஜாவிடம் யாருடைய தொழிலையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. நான் போய் சொல்லிவிட்டு வருகிறேன் என தியாகு படப்பிடிப்பிற்கு வந்தாராம்.

இதையும் படிங்க : அந்த சீன்ல நான் நடிக்க முடியாது சார்!.. லியோவில் கெளதம் மேனன் நடிக்க மறுத்த காட்சி.. என்ன தெரியுமா?

படப்பிடிப்பிற்கு வந்த தியாகு நேராக கமலிடம் "உங்க படத்தில் நடிக்க கூடாது என்று சொல்கிறார்கள். நான் என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்" என்று கேட்டாராம். உடனே கமல் தேனப்பனை அழைத்து பேக்கப் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

Next Story