அந்த நடிகை வேண்டாம் அதிரடியாக கூறிய மாஸ் நடிகர்…. காரணம் இதுதானாம்….

Published on: October 22, 2021
actress
---Advertisement---

மாஸ் நடிகராக வலம் வரும் அந்த நடிகர் தற்போது முதல் முறையாக அக்கட தேச இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகருடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்த தேசிய விருது நடிகை தான் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

விருது நடிகையும் எப்படியாவது மூன்றாவது முறையாக மாஸ் நடிகருடன் ஜோடி சேர்ந்து விட்டால் கோலிவுட்டில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடலாம் என கனவு கண்டு வந்தார். நடிகைக்கு அக்கட தேசத்தில் சற்று மார்க்கெட் இருப்பதால், இயக்குனரிடம் சிபாரிசு செய்ய சொல்லியுள்ளார்.

Also Read

இயக்குனரும் நடிகைக்காக மாஸ் நடிகரிடம் கேட்க நடிகரோ முடியவே முடியாது என கறாராக கூறிவிட்டாராம். ஏற்கனவே அந்த நடிகையுடன் இரண்டு படங்களில் நடித்த போது இருவருக்கும் சுத்தமாக கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை என பலர் நடிகரின் காதுபடவே பேசியுள்ளார்களாம்.

அதுமட்டுமின்றி தற்போது மாஸ் நடிகர் இந்திய அளவில் அவர் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளாராம். எனவே இதற்கு அந்த நடிகை செட்டாக மாட்டார் என கூறி பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய கூறிவிட்டாராம்.

நடிகரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த நடிகை அடுத்த படத்திலாவது எப்படியாவது மாஸ் நடிகருடன் ஜோடி சேர வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். அவர் நினைத்தது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment