More
Read more!
Categories: Cinema News latest news

‘தக் லைஃப்’ படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்! உள்ளே எண்ட்ரி ஆகும் ரஜினி வெறியன்.. யார் தெரியுமா?

Thug Life: கமல் மணிரத்தினம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சேரும் படமாக தக் லைஃப் படம் அமைந்தது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்த திட்டமிட்டனர். இந்தப் படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணி ரத்தினமும் சேர்ந்து பணியாற்றும் திரைப்படமாக தக் லைஃப் படம் அமையும் . அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாயகன் என்ற காலத்தால் என்றும் அழியாத ஒரு காவியத்தை கொடுத்த அதே கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பெரிய கூஸ்பம்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அடுத்த ரஜினி இவர் தானாம்… ஆட்டோகிராப் வாங்க வந்தவரை ஹீரோவாக்கிய இயக்குனர் இமயம்!…

இந்த நிலையில் திடீரென தக் லைஃப் படத்தில் இருந்து ஒரு முக்கியமான நடிகர் விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை. நடிகர் துல்கர் சல்மான்தான். ஏற்கனவே துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக இருப்பதால் அவரின் கால்ஷீட் பெரும் பிரச்சினையாக இருக்கிறதாம்.

அதனால் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தெரிகிறது. சூர்யா சுதா கொங்காரா இணையும் புறநானூறு படத்திலும் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார். அதோடு லக்கி பாஸ்கர் மற்றும் காந்தா போன்ற மலையாள படங்களிலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறாராம். இதன் காரணமாகவே அவர் தக் லைஃப் படத்தில் இருந்து விலகுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நக்மாவையும் மிஞ்சிய ஜோதிகாவின் இன்னொரு அக்கா.. அட இந்தப் பட ஹீரோயினா?

அவருக்கு பதிலாக நடிகர் நானியை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் படக்குழு இருக்கின்றனர். நல்ல சாய்ஸ்தான் நானி. அவரும் நான் ஈ படத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் நடிக்கவே இல்லை. அதனால் இந்தப் படம் நானிக்கு ஒரு பெரிய கம்பேக் படமாக அமையும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நானி அடிப்படையிலேயே ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்பதுதான்.

Published by
Rohini

Recent Posts