துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று படங்கள் வெளியாகி இருந்தது. அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர். இதில் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கின்றது. தெலுங்கு படமாக தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர்.
இதையும் படிங்க: வீட்டில் இல்லை.. பூட்டை ஆட்டாதீர்!.. கங்குவாவை புரமோஷன் செய்த ரஜினியை கலாய்க்கும் மாறன்!..
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் அமரன் திரைப்படத்திற்கு அடுத்ததாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. முதல் நாளில் குறைந்த அளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் வரவேற்பை பார்த்துவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் அதிக ஸ்கிரீன்களில் இப்படத்தை வெளியிட்டார்கள்.
இதனால் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசூல் மிகச் சிறப்பாக அமைந்தது. சாதாரண வங்கி ஊழியரின் சாதனை பயணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார்கள் படக்குழுவினர். சீதாராம் திரைப்படத்திற்கு பிறகு லக்கி பாஸ்கர் திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கின்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் நிலையில் அதற்கு அடுத்த வரிசையில் லக்கி பாஸ்கர் படம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கின்றது.
இது குறித்து படக் குழுவினர் உற்சாகத்துடன் வீடியோ வெளியிட்டு பதிவிட்டு இருக்கிறார்கள். படத்தின் கிளிப்பிங்ஸ்களுடன் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில மாதங்களாக தன்னுடைய உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால்தான் படங்களில் நடிப்பது தடைப்பட்டதாகவும் தற்போது உடல் நலம் தேறி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இதுக்கு கூட நீங்க லாயக்கு இல்ல… கங்குவா படத்தை அடித்து தொங்கவிட்ட பிரபலம்..
மேலும் தமிழில் கமலஹாசன் மற்றும் சூர்யா ஆகியோருடன் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க முடியாமல் போனதற்கும் இதுதான் காரணம் எனவும் தெரிவித்திருந்தார். படவாய்ப்பை இழந்த துல்கர் சல்மானுக்கு லக்கி பாஸ்கர் படம் இந்த ஆண்டு லக்கியாகவே அமைந்திருக்கின்றது. தமிழ் ரசிகர்களையும் இந்த திரைப்படம் கொண்டாட வைத்துள்ளது. இன்னும் லக்கி பாஸ்கர் திரைப்படம் தெலுங்கில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…