துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் 7 நாட்களில் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவரின் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதாராம் போன்ற திரைப்படங்கள் தெலுங்கு, மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தது.
இதனால் தமிழில் துல்கர் சல்மானுக்கு என்று தனி இடம் உண்டு. அதிலும் டீன் ஏஜ் பெண்கள் தங்களின் கனவு நாயகனாக துல்கர் சல்மானை பார்த்து வருகிறார்கள். இவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ஆயிஷா கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். 1989 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து படம் உருவாகி இருந்தது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக வரும் துல்கர் சல்மான் வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகின்றார். நீதி நேர்மை என்று வாழ்ந்து வரும் அவர் கடன் நெருக்கடி, குடும்ப சூழல் காரணமாக நேர்மையை தவறும் சூழல் உருவாகின்றது.
வங்கியில் இருந்து பணத்தை கையாடல் செய்கின்றார். இதனால் வரும் பிரச்சனைகளை அவர் எப்படி எதிர்கொள்கின்றார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் வரும் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். தெலுங்கு சினிமாவில் இந்த திரைப்படம் சக்க போடு போட்டு வருகின்றது.
தமிழிலும் அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட திரைப்படங்களுடன் இந்த திரைப்படம் வெளியானது. முதல் நாளில் குறைந்த அளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் வரவேற்பு காரணமாக அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகள் அதிக அளவு ஒதுக்கப்பட்டு தமிழகத்திலும் இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
அமரன் திரைப்படத்திற்கு பிறகு லக்கி பாஸ்கர் திரைப்படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் இந்த திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் மிகச் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…