பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா?!. குணப்படுத்த முடியுமா?!... அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!..

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பல ஹீரோக்களை உருவாக்கியவர் இயக்குனர் பிரியதர்ஷன். இவரின் மகன் ஃபகத் பாசில். மலையாள சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒல்லியான தேகம், முடி கொட்டிய தலை என இருந்தாலும் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கி கவனம் ஈர்த்தார்.
ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வசூலை பெற்றது. நல்ல கதை, அதில் தனக்கு நல்ல கதாபாத்திரம் என்பதுதான் ஃபகத் பாசில் படங்கள் வெற்றியடைய முக்கிய காரணம். எந்த ஹீரோவும் செய்ய யோசிக்கும் வித்தியாசமான, இயல்பான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர்.
இதையும் படிங்க: விடாமுயற்சி ஷூட்டிங் நின்னதுக்கு காரணமே அஜித்தான்!. அட என்னப்பா சொல்றீங்க!…
அதனால்தன கோலிவுட் ரசிகர்களுக்கும் இவரை பிடித்துப்போனது. தமிழில் வேலைக்காரன் படம் மூலம் நடிக்க துவங்கினார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தால் ஃபகத் பாசிலுக்கு தமிழிலும் ரசிகர்கள் உருவானார்கள்.

fahat
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஃபகத் பாசில். சமீபத்தில் வெளியான ஆவேசம் படமும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் வசித்து வந்தாலும் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை கொடுத்து அட்லீயை தூக்கிய தெலுங்கு நிறுவனம்… அந்த ஹீரோ தான் மாஸ்!..
ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஃபகத் பாசில் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) என சொல்வார்கள். இந்த நோய் தனக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நோய் ஏற்பட்டால் கவனக்குறைவு மற்றும் அதிகம் பேசுவது ஆகிய பாதிப்புகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
பொதுவாக இந்த நோய் குழந்தைகளுக்கே அதிகளவில் ஏற்படும் எனவும், 41 வயதான தனக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதால் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறதா என மருத்துவர்களிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். குழந்தைகள் இல்லம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.