டப்பிங் அறையில் நடிகையுடன் தனியாக இருந்த கவுண்டமணி! இடையூறா இருந்த நடிகரை என்ன செய்தார் தெரியுமா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் 1970-களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கவுண்டமணி. பல திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி காதாநாயகனாக மாறியவர்.
கார்த்திக், சரத்குமார், சத்தியராஜ் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் போல் பல படங்களில் நடித்துள்ளார். அவர்களுடன் நடிக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது அவர்களுடன் டூயட் பாடலில் தோன்றி விடுவார்.
இதையும் படிங்க : 1000 பெரியாரை கண்முன் நிறுத்திய பாலா – கோயிலுக்கு வெளியே இருந்த பிச்சைக்காரனை அழைத்து என்ன செய்தார் தெரியுமா
ஹீரோக்கு மட்டும்தான் டூயட் போடுவீங்களா, எனக்கெல்லாம் கிடையாதா? என்று கேட்டு வாங்கியே அந்த பாடலில் இடம்பெறுவார். வடிவேலுவை பற்றி சக நடிகர்கள் குறை கூறுவது போல கவுண்டமணி பற்றி லேடிஸ் விஷயத்தில் சில செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கனாதன் ஒரு செய்தியை கவுண்டமணி பற்றி கூறினார். அதாவது ஏராளமான படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாகவோ அல்லது கீப்பாகவோ நடித்திருப்பவர் நடிகை சர்மிலி.
அவருடன் இரண்டு மூன்று படங்களில் கணவனாக நடித்தவர் பயில்வான் ரெங்கனாதன். ஆவாரம்பூ படத்தில் ரெங்கனாதனுக்கு மனைவியாக நடித்திருக்கும் சர்மிலியை பார்க்க ரகசியமாக வருவார் கவுண்டமணி. அந்த சீன் இன்று வரை அனைவராலும் ரசிக்க முடிகிறது. அப்போது ஒரு சீனில் சர்மிலியை பயில்வான் தூக்கி சுத்துவது போன்ற காட்சி.
இதையும் படிங்க : கே.பாலசந்தர் பேச்சை மீறி பாலிவுட் சென்ற ரஜினி.. கடுப்பாகி திரும்பி வந்தது இதனால்தான்..
அதை பார்த்ததில் இருந்தே பயில்வான் மீது கவுண்டமணிக்கு கோபமாம். மேலும் இந்த சீனுக்காக டப்பிங் பேசும் அறையில் இருந்து ஒரு சவுண்ட் வந்ததாம். அங்கு கவுண்டமணிக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம் சர்மிலி. அந்தளவுக்கு கவுண்டமணியும் சர்மிலியும் நெருக்கமாக இருந்தார்களாம்.
இன்னொரு படத்திலும் பயில்வானுக்கு மனைவியாக சர்மிலியை கமிட் செய்திருக்கின்றனர். ஆனால் கவுண்டமணி பயில்வானை போடவேண்டாம் என வேறொரு நடிகரை நடிக்க வைக்கச் சொல்லியிருக்கிறார். இந்த செய்தியை பயில்வான் கூறினார்.