ஆம்பள மாறி இருக்காயா?.. படப்பிடிப்பில் கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யாருனு தெரியுமா?....
தமிழ் சினிமாவில் நக்கல் மன்னன், கலாய் மன்னன் என அறியப்படுபவர் நடிகர் கவுண்டமணி. இவருடைய இயற்பெயர் சுப்பிரமணி தான். ஆனால் ஒரு நாடகத்தில் கவுண்டராக கதாபாத்திரம் ஏற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அன்று முதல் கவுண்டமணி என்று அறியப்பட்டார்.
இவருடைய பூர்வீகம் கோயம்புத்தூர் என்பதால் நக்கலுக்கு பஞ்சமில்லாமல் இவரிடம் இருந்தது. ஆரம்பத்தில் சர்வர் சுந்தரம், அன்னக்கிளி போன்ற படங்களில் சிறு நடிகராக நடித்திருந்தார். அதன் பிறகு 16 வயதினிலே படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
சினிமாவில் இவர் இல்லாமல் எந்த படமும் இல்லை என்ற அளவுக்கு நிலைமை வந்ததும் பல நடிகர்கள் காத்திருந்து நடித்துக் கொடுத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு அனைத்து படங்களிலும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளால் பிஸியாக நடித்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் பாரபட்சமில்லாமல் அனைவரையும் நக்கல் அடித்து கவுண்டர் போடுவராகவும் இருந்தார். இதனாலேயே பல நடிகர்கள் இவர் நடிக்கிறார் என்றால் கொஞ்சம் தயங்கவும் செய்வார்களாம். சத்யராஜுடன் கவுண்டமணி செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது. இருவரும் சேர்ந்து பலபேரை கிண்டல் செய்துள்ளனர்.
ஒரு சமயம் சத்யராஜின் மகன் சிபிராஜின் படம் நாய்கள் ஜாக்கிரதை படத்தை பார்த்து விட்டு கவுண்டமணி சத்யராஜிடம் ‘சத்யராஜ் நாய் நல்லா நடிச்சிருக்குப்பா, உன் மகன் விட நாய் நல்லா நடிச்சிருக்குப்பா’ என்று கூறினாராம்.
அதே போல் சத்யராஜின் படமான ‘தங்கம்’ திரைப்படத்தில் பணியாற்றும் போதும் சத்யராஜிடம் ‘சத்யராஜ் இனி 50 நாள்கள் நீ ஆம்பள கூடதான் நடிக்கனும்பா’ என்று கூறினாராம். அதற்கு சத்யராஜ் ‘ஆமாண்ணே நீங்களும் ஆம்பளதானே’ என்று சொல்ல ‘அட நான் ஹீரோயின சொன்னேன்பா, பாக்க அப்டித்தான் இருக்கு’ என்று கூறினாராம். அந்தப் படத்தில் கேரளா நடிகை மேக்னா நாயர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க : இயக்குனருக்கு நடந்த சோகங்களைதான் படமாக்கியிருக்கோம்! – ஓப்பன் டாக் கொடுத்த அருள்நிதி…