தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓட்டம் பிடித்த நடிகர்...! அவங்க மேல கை வைச்சா சும்மா இருப்பாங்களா விஜய் ரசிகர்கள்...
ஷாஜஹான், பிரியாத வரம் வேண்டும், புன்னகை தேசம் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் நடிகர் திவாகர் கிருஷ்ணன். இவர் அதிகமாக மக்களிடம் அறியப்பட்டது விஜய் நடித்த ஷாஜஹான் படத்தின் இருந்து தான். அந்த படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்திருப்பார். இவர் நடித்த எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் போல தான் இருக்கும்.
எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு நண்பன் காதலி இருப்பது போல இவரும் உண்மையிலயே அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அமைந்து விடுவார். ஷாஜஹான் படத்தில் விஜய் ஹீரோயினை காதலித்துக் கொண்டிருப்பார்.மறுபக்கம் அவரது நண்பராகிய திவாகர் கிருஷ்ணனும் அதே ஹீரோயினை காதலித்துக் கொண்டிருப்பார். தான் காதலிக்கும் பெண்ணை தான் நண்பரும் காதலிக்கிறார் என்று தெரியாமல் நண்பர் காதலுக்கும் விஜய் உதவியாக இருப்பார்.
கடைசியில் விஜய் முன்னாடி நண்பரும் ஹீரோயினும் வந்து எங்க காதலுக்கு உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி என கூறிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் நானும் உன்னை தான் காதலித்தேன் என்று பட முழுக்க சொல்ல மாட்டார். நண்பன் காதலுக்கு தான் குறுக்கீடாக நிற்கக் கூடாது என விலகி விடுவார்.இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த படத்தை நடிகர் திவாகர் கிருஷ்ணன் சென்னைக்கு வந்து ஒரு தியேட்டரில் வந்து பார்த்துக் கொண்டிருந்தாராம். ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பாதியிலயே வெளியே வந்து விட்டாராம். அந்த அளவுக்கு விஜய் கிட்ட இருந்து ஹீரோயினை பிரிச்சுட்டானே என ரொம்பவும் வருத்தத்தோடு சில பேர் அழுகையோடும் பார்த்துக் கொண்டு இருந்தனராம். இந்த நிலைமையில் என்னை பாத்தாங்கனா என்னை காலி பண்ணிருவாங்கனு தான் பாதியிலயே வந்துட்டேன் என்று கூறினார்.