சாய் பல்லவி மீது எனக்கு கிரஷ்- வெட்கப்பட்டு பேட்டி கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்!...

by Arun Prasad |   ( Updated:2023-06-01 07:44:23  )
Sai Pallavi
X

Sai Pallavi

சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவின் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் சாய் பல்லவி ஒரு மிகச் சிறந்த நடிகை மட்டுமல்லாது சூறாவளியாக நடனமாடவும் கூடியவர். “பிரேமம்” திரைப்படத்தில் அவரது நடனத்தை பார்த்து அசந்து போனவர்கள் பலர் உண்டு.

சமீப காலமாக சாய் பல்லவி முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். “கார்கி”, “விராட பருவம்” ஆகிய திரைப்படங்களில் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பலரும் பாராட்டினார்கள். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகரான குல்சன் தேவய்யா, தனக்கு சாய் பல்லவி மீது கிரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார். அப்பேட்டியில் பேசிய அவர், “எனக்கு சாய் பல்லவி மீது மிகப்பெரிய கிரஷ் இருக்கிறது. அவரது தொலைப்பேசி எண் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை தொடர்புகொண்டு பேசுவதற்கு எனக்கு துணிச்சல் வரவில்லை.

அவர் மீது வெறும் கிரஷ்தானே தவிர அதனை தாண்டி வேறு எதுவும் இல்லை என தோன்றுகிறது. அவருடன் ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என குல்சன் தேவய்யா மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இவரது பேட்டியால் சாய் பல்லவி ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

Gulshan Devaiah

Gulshan Devaiah

குல்சன் தேவய்யா தற்போது முரட்டு சிங்கிளாக இருந்தாலும் கடந்த 2012 ஆம் ஆண்டு கல்லிரோய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லிரோயும் குல்சனும் விவாகரத்து செய்துகொண்டனர் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: விஜய்க்கு வில்லனா?!.. கறாக மறுத்த மைக் மோகன்.. அட அந்த படத்துக்கா?!..

Next Story