சம்பாதிச்ச எல்லா காசையும் இந்த படத்துல போட்ருக்கேன்!.. உருக்கமாக பேசிய ஹிப்ஹாப் தமிழா!..
Hiphop tamizha: கோவையை சேர்ந்தவர் ஆதி. இசையில் ஆர்வம் கொண்டவர். எனவே, சொந்தமாக ஆல்பம் பாடல்களை போட்டு வந்தார். அதில், சில பாடல்கள் ஹிட் அடித்தது. அந்த ஆல்பம் பாடல்களில் அவரே நடிக்கவும் செய்திருந்தார். அதன்பின் சினிமாவில் நுழைந்தார். ஆர்.ஆர்.வெங்கடபதி ஜீவா என்பது இவருக்கு அப்பா - அம்மா வைத்த பெயர்.
அதை மாற்றி ‘ஆதி’ என மாற்றிக்கொண்டார். அதன்பின் ஆல்பம் பாடல்கள் போட்டபோது ஹிப்ஹாப் தமிழா என வைத்துக்கொண்டார். ஜல்லிக்கட்டு தொடர்பாக இவர் போட்ட ‘நீ எந்த ஊரு?’ பாடல் இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியே சினிமாவிலும் இசையமைக்க துவங்கினார்.
இதையும் படிங்க: 5 கெட்டப்புல கலக்கப் போகும் வடிவேலு… டைரக்டர் அவரா…? அப்போ சூப்பர்ஹிட் தான்!
இவர் நடித்த முதல் திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த படத்தில் கதையை அவரே எழுதி இயக்கியிருந்தார். அதன்பின் நட்பே துணை என்கிற படத்திலும் நடித்தார். நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன், பிடி சார் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது கடைசி உலகம் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
சுந்தர் சி. இயக்கிய ஆம்பள, அரண்மனை 4 ஆகிய படங்களில் இசையமைத்திருந்தார். தனி ஒருவன் படத்தில் ஆதி இசையமைத்த ‘காதல் கிரிக்கெட்டு’ பாடல் பலரின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது. குழந்தைகளும் விரும்பும் பாடலாக அது அமைந்தது. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தாலும் ஒரு வெற்றி பெற்ற நடிகராக ஆதியால் மாற முடியவில்லை.
எனவே, அவரும் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் கதை எழுதி இயக்கி இப்போது நடித்து வரும் திரைப்படம்தான் கடைசி உலகப்போர். இந்த படத்தை ஆதியே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் ஆதி. வருகிற 20ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி ‘இந்த படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் எடுத்திருக்கிறேன். இதுவரை நான் சினிமாவில் சம்பாதித்த எல்லா பணத்தையும் இதில் போட்டிருக்கிறேன். இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து படமெடுப்பேன். இது ஒரு ரிஸ்க்கான திரைப்படம். இதுவரை சினிமாவில் வந்த எல்லா ஃபார்முலாக்களையும் இந்த படத்தில் நான் உடைத்திருக்கிறேன்’ என ஆதி சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: எச்.வினோத்த அடிச்சு சாவடிச்சிரலானு தோணுது! பார்த்திபனுக்கு அப்படி என்ன கோபம்?